உங்கள் ஸ்மார்ட் போன் கேமரா அழகாக இருக்கும். ஆனால் அதேசமயம் மென்மையானதாக இருக்கும். ஆனால் நீங்கள் செய்யும் சில தவறுகள் உங்கள் போன் கேமராவை சேதப்படுத்தலாம். இங்கு நீங்கள் செய்ய கூடாத, தவிர்க்க வேண்டிய சில முக்கிய டிப்ஸ் பற்றி பார்ப்போம்.
லேசர் லைட்-ஐ படம் எடுக்க கூடாது
இசை கச்சேரிகள், பொழுதுபோக்கு போன்ற நிகழ்ச்சிகளில் அதிக தீவிரம் கொண்ட லேசர் விளக்குகளைப் பயன்படுத்துகின்றன. அவற்றை உங்கள் ஸ்மார்ட்ஃபோனைக் கொண்டு படம்பிடிப்பது கேமரா சென்சாரை நிரந்தரமாக சேதப்படுத்தலாம். லேசர் விளக்குகளின் அதிக ஆற்றல் காரணமாக, லென்ஸ் அமைப்பு மற்றும் சென்சார் இரண்டும் பாதிக்கிறது.
Mounting on a bike
உங்கள் ஸ்மார்ட்போனை பைக் அல்லது ஸ்கூட்டரில் பொருத்துவது ஸ்மார்ட்போன் கேமராவை நிரந்தரமாக சேதப்படுத்தும். வேகமாக செல்லும் வாகனத்தால் ஏற்படும் அதிர்வுகளே இதற்கு காரணம். பைக்கில் ஸ்மார்ட்போனை பொருத்த வேண்டும் என்றால், ஒரு சிறப்பு மவுண்டிங் கிட் பயன்படுத்தவும்.
நீருக்கு அடியில் ஸ்மார்ட் போன் கூடாது
சில ஸ்மார்ட் போன் பிராண்டுகள் நீருக்கடியில் போட்டோ எடுக்கலாம் என்று கூறினாலும், இது IP மதிப்பீட்டில் கூட நிரந்தர சேதம் ஏற்படுத்தும். நீருக்கு அடியில் ஸ்மார்ட் போன் சூடாகிறது, இதன் காரணமாக போன் அமைப்பில் தண்ணீரை நுழையச் செய்து, கேமராவை சேதப்படுத்தும்.
தீவிர வெப்பநிலையில் பயன்படுத்த கூடாது
மிகவும் குளிராக இருந்தாலும் அல்லது அதிக வெப்பமாக இருந்தாலும், அதிக வெப்பநிலையில் வைத்து படம் எடுக்க கூடாது. இது கேமராவை சேதப்படுத்தும். உதாரணமாக சூரிய ஒளியில் நேரடியாக நீண்ட நேரம் பயன்படுத்தி படம் எடுப்பது, கேமராவை சேதப்படுத்தும். அதேபோல் சூரிய கிரகணத்தின் போது செய்யக் கூடாது.
source https://tamil.indianexpress.com/technology/mistakes-that-could-permanently-damage-phone-camera-4781240