கோவை மாவட்டம், வால்பாறையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் வெளியூர்களில் இருந்து வந்து நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் அரசு விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
தேசிய மகளிர் ஆணையத்தின் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் சார்பில், வால்பாறையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது மாணவ மாணவிகளிடம் உங்களுக்கு சமுதாயத்தில் எதாவது தொந்தரவு ஏற்பட்டதா என்பது குறித்து கேட்கப்பட்டது. அப்போது 7 மாணவிகள் தங்களுக்கு கல்லூரியில் பாலியல் தொந்தரவு இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், பாலியல் தொந்தரவினால் சரியாக படிக்க முடியவில்லை என்றும், நாங்கள் வெளியூர் என்பதால் இங்கு அரசு விடுதியில் தங்கி தான் படித்து வருகிறோம் என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து தேசிய மகளிர் ஆணைய ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணவேனி தலைமையில் இது குறித்து வால்பாறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், அங்கு மகளிர் காவல் நிலையம் இல்லாததால் பொள்ளாச்சி மகளிர் காவல் துறை அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். விசாரணையில் தற்காலிக பேராசிரியர்களான சதீஷ்குமார், முரளிராஜ், ராஜபாண்டி மற்றும் ஆய்வக உதவியாளர் அன்பரசு ஆகியோர் பாலியல் சீணடலில் ஈடுபட்டது தெரியவந்தது, இவர்கள் மீது பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபடுவது, தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு 4 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து போலீசார் அந்த கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை முரளிராஜ், சதீஷ்குமா, ராஜபாண்டியன் ஆகிய 3 தற்காலிக பேராசிரியர்களும், அன்பரசு என்ற ஆய்வக உதவியாளர் என 4 பேரை போலீசார் கைது செய்தனர். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யபப்ட்ட 4 பேர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சிகாக சமூக நலத்துறையில் இருந்து சென்றவர்களிடம் கல்லூரி மாணவிகள் புகார் அளித்துள்ளனர். மகளிர் ஆணைய அதிகாரி கிருஷ்ணவேணி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/four-arrest-including-three-professor-for-sexual-harassments-to-students-in-govt-arts-college-in-valparai-6942615