செவ்வாய், 10 பிப்ரவரி, 2026

ஒரே நாளில் 44 ஊராட்சி செயலாளர்கள் இடமாற்றம்- திருச்சி ஆட்சியர் அதிரடி

 

New Project

சென்னையில் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் எதிரொலியாக திருச்சி மாவட்டத்தில் 44 ஊராட்சி செயலாளர்கள் திடீர் இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சரவணன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதன்படி, அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேக்குடி, பெரிய கருப்பு, போதாவூர், திருச்செந்தூரை மற்றும் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாச்சிகுறிச்சி, நாகமங்கலம், சேதுராப்பட்டி, புங்கனூர், தாயனூர் மற்றும் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிருஷ்ணசமுத்திரம், கத்தாழை பேட்டை, வாழவந்தான் கோட்டை, மணப்பாறை ஊராட்சி ஒன்றியம், தாபேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 44 ஊராட்சி செயலாளர்களை இடமாற்றம் செய்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவுவிட்டுள்ளார்.

ஊராட்சி செயலாளர்கள் சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் நிலையில், திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 44 ஊராட்சி செயலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டது. ஊராட்சி செயலாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி: க.சண்முகவடிவேல்


source https://tamil.indianexpress.com/tamilnadu/mass-transfer-of-44-panchayat-secretaries-in-trichy-following-chennai-protests-11091955