ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

தேர்வு மையங்களில் ஏற்பட்ட குளறுபடி... குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுகள் ஒத்திவைப்பு

 


group 2

தமிழ்நாட்டில் குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுகள் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கடைசி நேரத்தில் தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்கள் மாற்றப்பட்டதாகவும், சில தேர்வு மையங்களில் தேர்வர்களின் எண் இடம்பெறவில்லை என புகார் எழுந்தது. அதுமட்டுமல்லாமல், சில இடங்களில் வினாத்தாள் வரவில்லை என்ற புகாரும் முன்வைக்கப்பட்டது. 

அரும்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் பதிவெண் இடம்பெறாததால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தேர்வு நடத்துவதில் ஏற்பட்ட குளறுபடியை கண்டித்து பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தேர்வர்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கடைசி நேரத்தில் பல தேர்வு மையங்களில் ஏற்பட்ட சிக்கலால் சென்னையில் உள்ள  4 மையங்கள் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் 47 மையங்களில் நடைபெற இருந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. மேலும், தேர்வு நடைபெற உள்ள மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/group-2-2a-exam-postponed-tnpsc-announced-11086710