மழை, வெள்ள நிவாரணப் பணியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆயிரக் கணக்கான தொண்டர்கள் களமிறங்கி சேவை செய்து வருகின்றனர்.
வெள்ளத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் பார்த்த அனைவரின் உள்ளமும் கனத்தது.
வீடு முற்றிலும் சேதமடைந்தவர்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும் என்ற கருத்து எழுந்தது.
அதை பிரதிபலிக்கும் வண்ணம் வீடு முற்றிலும் சேதமடைந்தவர்களுக்கு வீடு கட்டித்தரப்படும் என்று இன்று 09.12.15 காலை அறிவிப்பை வெளியிட்டோம்.

இந்த அறிவிப்பை
தவ்ஹீத் ஜமாஅத்தின் உயர்நிலைக் குழுவில் பரிசீலனை செய்த போது இது அரசு செய்யவேண்டிய பணி. இதற்கு பல நூறு கோடிகள் செலவாகும். நமக்கு சாத்தியமற்றது. நாம் திரட்டும் பொருளாதாரத்தில் அவ்வளவு பெரிய பணியைச் செய்ய முடியாது என்று முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வீடு கட்டித் தருவோம் என்ற அறிவிப்பைத் திரும்பப் பெறுகிறோம்.

எந்த அளவுக்கு நிதி திரட்டப்படுகிறதோ அந்த அளவுக்கு செலவிட்டு துல்லியமாக கணக்கை காட்டுவோம்.
இன்று 09.12.15 காலை இந்த அறிவிப்பை நாம் அறிவித்தது முதல் தற்போது இந்த அறிவிப்பை வெளியிடும் இந்த நேரம் வரை (அதாவது 09.12.15 இரவு 11.35மணி வரை) யாரேனும் வீடு கட்டித்தரும் பணிக்காக நிதி அனுப்பி இருந்தால் அதன் விபரத்தைச் சொல்லி திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
PM அல்தாஃபி
மாநிலத் தலைவர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
PM அல்தாஃபி
மாநிலத் தலைவர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்