கோவையில் 13 வயது சிறுவனை காவலர் தாக்கியது குறித்து விளக்கம் அளிக்க மாநகர காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் சில சிறுவர்கள் வெளியே சுற்றியுள்ளனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் துர்காராஜ் என்பவர், 13 வயது சிறுவனை லத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், அந்த சிறுவனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து, காவலர் துர்காராஜ் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், சிறுவன் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 3 வார காலத்திற்குள் விளக்கம் அளிக்க, கோவை மாநகர காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.