கொரோனா தொற்று, ஆண், பெண் , வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரையும் பாதித்துவரும்நிலையிலும், வயதான பெண்களைவிட ஆண்களே அதிகளவில் மரணிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு, பெண்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. ஆண்களில் இது, நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துவதாக உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேச்சர் ஜெர்னலில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆண்கள் குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், கொரோனா தொற்றுக்கு உள்ளாகும்போது தகுந்த தடுப்புமுறைகளை மேற்கொள்வது கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் யேல் பல்கலைகழகம் நடத்தியுள்ள இந்த ஆராய்ச்சியில் பங்கேற்ற நோய் எதிர்ப்பு சக்தியியல் நிபுணர் அகிகோ இவாசகி கூறியதாவது, ஆண்களுக்கு இயற்கையிலேயே அமைந்துள்ள நோய்த்தடுப்பு சக்தி போதுமானதாக இல்லை. அவர்களுக்கு கூடுதல் எதிர்ப்பு சக்தி தேவைப்படுகிறது.
பாலின வேறுபாடு, நோய் எதிர்ப்பு சக்தியில் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெண்களின் உடலில் மாற்றம் ஏற்படும்போதே, அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரித்து விடுகிறது. நோயை உண்டாகும் கிருமிகளை எதிர்த்து போரிடும் வகையில் அதன் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அவர்களுக்கு அதிகளவில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால், அதிளவிலான ஆட்டோஇம்முயுன் நோய்களுக்கு அவர்கள் ஆட்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியீஜன் ஹென்ரிச் பேட்டே இன்ஸ்ட்டியுட் மற்றுமம் ஹாம்பர்க் எப்பென்டார்ப் மருத்துவ பல்கலைகழக நோய் தடுப்பாற்றல் நிபுணர் டாக்டர் மார்கஸ் ஆல்ட்பெல்ட் கூறியதாவது, கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்துகளின் வீரியம், பாலினம், அவர்களுக்கு அளிக்கப்படும் மருந்தின் அளவு உள்ளிட்டவைகளை பொறுத்து அமைவதாக குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பு மருந்து இளம்வயது பெண்களுக்கு ஒரு டோஸ் போதும் என்ற நிலையில், வயதான ஆண்களுக்கு 3 டோஸ்கள் அளவிற்கு தேவைப்படுகிறது.
பிஷர் நிறுவனத்தின் துணை தலைவர் டாக்டர் வில்லிம் குருபர் கூறியதாவது, கொரோனா தடுப்பு மருந்து சோதனைகள்தான் தற்போது நடைபெற்று வருகிறதே தவிர, அதில் பங்கேற்பாளர்களின் பாலினம் உள்ளிட்ட விபரங்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை என்றும், அவர்களின் பரம்பரை, பின்னணி உள்ளிட்டவைகளை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
17 ஆண்கள், 22 பெண்கள் என கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை ஆய்வுக்கு இவாசகி டீம் எடுத்துக்கொண்டது. அவர்களின் ரத்தம், தொண்டைக்குழியில் இருந்து எடுத்த மாதிரி, எச்சில், சிறுநீர் உள்ளிட்டவைகள் அவர்களிடமிருந்து 3 நாட்கள் முதல் 7 நாட்களுக்கு பெறப்பட்டன.
நோயாளிகள் வெண்டிலேட்டரில் இருக்கும்போது அவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்து, அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும். இதன்மூலம், கொரோனா வைரசால் ஏற்பட்டால் இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை ஆராய்ந்தோம் என்று இவசாகி தெரிவித்தார்.
மேலும் 59 ஆண்கள் மற்றும் பெண்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், இந்த முடிவு கிடைக்கவில்லை. இதன்மூலம், பெண்களின் உடலில் அதிகளவில் T-cells உற்பத்தி ஆகின்றன. இது கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாது, தொற்று பரவலையும் தடுக்கிறது.
T-cells எண்ணிக்கை ஆண்களின் குறைவாக உள்ள காரணத்தினாலும், வயதான ஆண்களில் பலவனீமான அதேசமயம் குறைந்த அளவில் T-cells இருப்பதனால் அவர்களுக்கு பாதிப்பு அதிகளவில் உள்ளது.
ஆண்களின் வயதாக ஆக நோய் எதிர்ப்பு சக்தி குறைவதும், பலவீனமான T-cells காரணமாக அவர்கள் எளிதில் தொற்றுக்கு ஆட்படுகின்றனர். இதுவே பெண்களில் எதிர்மறையான நிலை நிலவுகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு அவர்களது ரத்ததில் சைட்டோகைன்ஸ் அளவு அதிகரிக்கப்படுகிறது. இந்த புரதம், நோய் எதிர்ப்பு சக்தியில் முக்கிய பங்காற்றுகிறது. சைட்டோகைன்சில் சில வகை interleukin-8 and interleukin-18 பெண்களைவிட ஆண்களில் அதிகம் செயலாற்றுகின்றன.
பெண்கள் நோய்வாய்ப்படும்போது அவர்களது உடலில் அதிகளவில் சைட்டோகைன்ஸ் உருவாகிறது கண்டறியப்பட்டுள்ளது.
60 வயது வரை உள்ள பெண்களை வைத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இந்த ஆய்வில் சில நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
கொரோனா தொற்று ஏற்பட்ட ஒருவருக்கு அவரின் வயது முக்கிய காரணியாக கருதப்பட்டாலும், அவரின் வயது, பாலினம் உள்ளிட்டவைகளையும் கருத்தில் கொள்ள வேண்டியதாக உள்ளதாக புளும்பெர்க் பொது சுகாதார பள்ளி விஞ்ஞானி சப்ரா கிளெயின் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு மாதவிடாய் முடிவடையும் நிலையில், அவர்களின் பால் உணர்வு ஹார்மோனும், நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.