ஞாயிறு, 8 மே, 2016

மொபைல் போன் சந்தையில் ஆப்பிள், விண்டோஸை முந்திய இந்திய தயாரிப்பு ஓஎஸ்

மொபைல் போன் சந்தையில் ஆப்பிள் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களை முந்தி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இண்டஸ் ஓஎஸ் 2-ம் இடம் பிடித்துள்ளது.
Indus
மும்பையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இண்டஸ் ஓஎஸ், இந்திய மொபைல் போன் சந்தையில் ஆண்ட்ராய்ட் இயங்குதளங்களுக்கு அடுத்தபடியாக 2 ஆவது இடம் பிடித்துள்ளது.
இந்திய மொபைல் போன் சந்தையில் 83.8 சதவீதத்துடன் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் இயங்குதளம் முதலிடம் வகிக்க, இண்டஸ் இயங்குதளம் 5.6 சதவீத பயனாளர்களுடன் 2 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக முறையே 2.5 மற்றும் 0.7 பங்குகளுடன் ஆப்பிள் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்கள் உள்ளன.
தற்போது, 5 லட்சம் பயனாளர்களுடன் உள்ள இண்டஸ் இயங்குதளம், இந்த எண்ணிக்கையை அடுத்த 6 மதங்களுக்குள் இரு மடங்காக்க அதிகரிக்கும் என்றும் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராகேஷ் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.
உலகின் முதல் ரீஜனல் ஓஎஸ் என்ற பெயருடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இண்டஸ் ஓஎஸ், 12 இந்திய மொழிகளில் பயன்படுத்தும்படியான வசதிகள் இடம்பெற்றுள்ளன.