திங்கள், 6 பிப்ரவரி, 2017

ஓட்டு போடாதவர்கள் அரசை விமர்சிக்காதீர்கள் - உச்சநீதிமன்றம்

தேர்தலில் ஓட்டு போடாதவர்கள், அரசை விமர்சிக்க எந்த உரிமையும் இல்லை என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

நாடெங்கிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக் கோரி, 'இந்தியாவின் குரல்' என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி, ஜகதீஷ் சிங் கேஹர் தலைமையிலான அமர்வு முன்  விசாரணைக்கு வந்தது. நாடு முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு  மத்திய - மாநில அரசுகள்  நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம்  தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும்  இந்தியாவின் குரல் அமைப்பின் நிர்வாகியான, தனேஷ் லேஷ்தான் கோரிக்கைவிடுத்தார். 


அப்போது, தேர்தலில் நீங்கள் ஓட்டு போட்டீர்களா என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தனக்கு தேர்தலில் நம்பிக்கை இல்லை  என்பதால் இதுவரை  தேர்தலில் ஓட்டு போட்டதில்லை  என  தனேஷ் லேஷ்தான் தெரிவித்தார். இதனால் எரிச்சலடைந்த நீதிபதிகள் தேர்தலில் ஓட்டு போடாதவர்கள் அரசிடம் கேள்வி எழுப்பவோ, அரசு மீது குற்றம்சாட்டவோ உரிமை இல்லை என கருத்துத் தெரிவித்தனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி, அனைத்து மாநிலத்துக்கும் உத்தரவிட முடியாது என்று கூறிய நீதிபதிகள், எங்கெங்கு ஆக்கிரமிப்பு உள்ளதாக நினைக்கிறீர்களோ, அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களில் தனித் தனியாக வழக்கு தொடரலாம் என தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.
news7

Related Posts: