ஞாயிறு, 29 மார்ச், 2020

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.  credit ns7.tv
சீனாவின் வூகான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ், தற்போது உலகிற்கு பேராபத்தாக திகழ்கிறது. உலகம் முழுவதும் 26,000-க்கும் மேற்பட்டோரை பலி வாங்கியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக  பரவி வருகிறது. 
இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 908 ஆக அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதே சமயம், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 83 பேர் குணமடைந்திருப்பதாகவும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
உயிரிழந்தவர்களின் விவரம்: 
மகாராஷ்டிரா               4
கர்நாடகா                 3 
குஜராத்                3
மத்திய பிரேதசம்               2
டெல்லி                 1 
தமிழ்நாடு               1
பாஞ்சாப்                1
ஜம்மு காஷ்மீர்                1
மேற்குவங்கம்               1
பீகார்               1
கேரளா               1
ஹிமாச்சல் பிரதேசம்               1

Related Posts: