ஞாயிறு, 29 மார்ச், 2020

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 42-ஆக உயர்வு:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 42-ஆக உயர்வு: சென்னை, மதுரையில் தலா ஒருவர் அனுமதி Corona Virus : இந்தியா மற்றும் தமிழகத்தில் கொரோனா குறித்த மருத்துவ செய்திகள், அரசு அறிவிப்புகள் குறித்த உடனடி தகவல்களை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டுவிட்டர் பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
சென்னையின் மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தனிமைப்படுத்தப்பட்டு தனியார் மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளார்.
விருதுநகர் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த 60 வயது முதியவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளார்.
மார்ச் 28ம் தேதி நிலவரப்படி
2,09,284 நபர்கள்  – பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்
13,323 பேர் – தனிமை வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
3,044 பேருக்கு வெண்டிலேட்டர் வசதி செய்து தரப்பட்டுள்ளது
277 பேர் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
மாதிரி பரிசோதனை – 1500 ( நெகட்டிவ் – 1252 பாசிட்டிவ் -40 ( 2 பேர் டிஸ்சார்ஜ்)
சோதனை செய்யப்பட்டு வருபவை – 208
என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் 775 ஆக்டிவ் கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரையில், 78  பேர் மருத்துவக் கண்காணிப்புக்குப் பின் வீடு திரும்பியுள்ளதாகவும்,19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலன் அமைச்சகம் இன்று (மார்ச்-28) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா செய்தியாளர்களிடம்,” 2009 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியை விட ஒரு மோசமான மந்தநிலையை தற்போது உலகம் எதிர்கொள்கிறது. 2021 ஆம் ஆண்டில் இந்த மந்த நிலையில் இருந்து மீளவாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம்,”கொரோனா வைரஸ் பரவலின் 3 ஆம் கட்டத்திற்குத் டெல்லி தயாராகி விட்டது” என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதிகளவிலான எண்ணிக்கை வந்தாலும்,அதை நிலைத்தன்மையோடு டெல்லி அரசு கையாளும் என்று தெரிவித்தார்.
இன்று காலைவரை உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 27,333 ஆக உயர்ந்துள்ளது.
credit indianexpress.com