ஞாயிறு, 29 மார்ச், 2020

குழந்தைகளுக்கு மன அழுத்தம் இதன்மூலமும் அதிகரிக்குமாம் -

குழந்தைகளுக்கு மன அழுத்தம் இதன்மூலமும் அதிகரிக்குமாம் - சொல்கிறது புதிய ஆய்வு தாயின் சோகத்திற்கு தாங்களே காரணம் என எண்ணும் குழந்தைகளுக்கு மனஅழுத்தம், பதற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது

தங்களது தாயின் சோகத்திற்கு தாங்களே காரணம் என எண்ணும் குழந்தைகளுக்கு மனஅழுத்தம், பதற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துவக்கத்திலேயே இதை கண்டுபிடிப்பதன் மூலம் நாம் குழந்தைகளுக்கு மனம் தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்க முடியும் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

குழந்தைகளுக்கு மன அழுத்தம் இதன்மூலமும் அதிகரிக்குமாம் - சொல்கிறது புதிய ஆய்வு

தாயின் சோகத்திற்கு தாங்களே காரணம் என எண்ணும் குழந்தைகளுக்கு மனஅழுத்தம், பதற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது

தங்களது தாயின் சோகத்திற்கு தாங்களே காரணம் என எண்ணும் குழந்தைகளுக்கு மனஅழுத்தம், பதற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துவக்கத்திலேயே இதை கண்டுபிடிப்பதன் மூலம் நாம் குழந்தைகளுக்கு மனம் தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்க முடியும் என்று ஆய்வு தெரிவிக்கிறது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
இந்த ஆய்வுக்கட்டுரை குடும்ப உளவியல் ஆராய்ச்சி பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. குழந்தைகளுடன் எப்போதும் தொடர்பில் இருக்கும் பெற்றோர்களும், மற்றவர்களும், தங்கள் தாயின் அறிகுறிகள் குறித்து, குழந்தைகள் கூறும் கருத்துக்களிலும் கவனம் செலுத்துங்கள் என்று அக்கட்டுரை அறிவுறுத்துகிறது.
தங்கள் தாயின் மன அழுத்தத்திற்கு காரணம் தாங்கள் தான் என்று குழந்தைகள் தவறாக எண்ணி வருந்தினால், பெற்றோர்களும், குழந்தைகளை கவனித்துக்கொள்பவர்களும் அதுகுறித்து பரிசீலிக்க வேண்டும் என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகளவு மனஅழுத்தத்திற்கு ஆளாகும் ஒரு தாயின் குழந்தைக்கும், மன அழுத்தம், பதற்றத்திற்கான அறிகுறிகள் தோன்றுவதற்கான ஆபத்துகள் அதிகமுள்ளது என்றாலும், இது அனைத்து குழந்தைகளுக்கும் பொருந்தாது என்று ஆய்வுக்கட்டுரையின் தலைமை எழுத்தாளர் அமெரிக்காவின் தெற்கு மெத்தடிஸ்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த கிறிஸ்டினா கவுரோஸ் கூறுகிறார். மாறாக அந்த குழந்தைகள் தாங்கள்தான் தங்கள் தாயின் சோகத்திற்கு காரணம் என்று எண்ணியவர்களுக்கு உள்ளார்ந்த அறிகுறிகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது.
கவுரோசை பொருத்தவரையில், இந்த பிரச்னைகளுக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு தெரபிகளும், எதிர்மறை சிந்தனைகளை போக்கக்கூடிய சிகிச்சைகளும் அளிக்கல்லாம் என்று கூறுகிறார். இந்த ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள், 129 தாய்மார்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளிடம் கணக்கெடுப்பு நடத்தினர். அவர்களை பள்ளிகள், விளம்பரங்கள், துண்டுபிரசுரங்கள் மூலம் தேர்ந்தெடுத்தனர்.
சராசரியாக 13 வயதுடைய குழந்தைகளை இந்த ஆய்வுக்கு உட்படுத்தியதாக அவர்கள் கூறுகின்றனர். ‘’என்னால் மனச்சோர்வை களைய முடியவில்லை’’. ‘’நான் எனது வழக்கமான நடவடிக்கைகளில் ஆர்வமின்றி இருக்கிறேன்’’, போன்ற 20 கேள்விகளுக்கு, ஆதரிக்கிறேன், நிராகரிக்கிறேன் என்ற வகையில் பதிலளிக்குமாறு வினாத்தாள் கொடுக்கப்பட்டிருந்தது. அதை வைத்து அவர்களிடம் மன அழுத்தத்திற்கான அறிகுறிகள் உள்ளதா என்று கண்டறியப்பட்டது. மனஅழுத்தம் இல்லாதவர்களும் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர்.
ஆய்வைப்பொருத்தவரையில், 12 சதவீத பெண்களுக்கு மனஅழுத்தத்திற்கான அறிகுறிகள் இருந்தது. தாய்மார்கள், தங்களின் குழந்தைகளுக்கு மனஅழுத்தம் மற்றும் பதற்றம் ஆகியவை உள்ளதா என்பதை கண்டறியுமாறு கேட்டுக்கொள்ளபட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அதேநேரத்தில், குழந்தைகளும் ஏதேனும் மனஅழுத்தம் அல்லது பதற்றத்தில் உள்ளார்களா என்பதை கண்டறிய, அவர்களும், 4 கணக்கெடுப்புகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டனர். அவர்களின் அம்மாக்களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்திற்காக, அவர்கள் மீது பழி போட்டுக்கொண்டார்களா என்பதையும் ஆய்வு உற்றுநோக்கியது.
தாய்மார்களின் மனஅழுத்தம் தொடர்பான அறிகுறிகளுக்கும், குழந்தைகளின் மனநல பிரச்னைகளுக்கும் தொடர்புகள் இருக்க வாய்ப்புள்ளதாக ஆய்வு கூறுகிறது. குழந்தைகள், தங்கள் தாயின் மனஅழுத்தப்பிரச்னைகளுக்கு காரணமாக தங்களை கருதினால், அவர்களின் தாயின் அறிகுறிகள் குறித்து கவலைகொள்கிறார்கள் என்று அர்த்தம். மன அழுத்தம் மற்றும் பதற்றத்திற்கும், ஆழ்ந்து சிந்திப்பதற்கும் தொடர்பு உள்ளது என்பது விரிவான உடல் ஆராய்ச்சியில் இருந்து நாம் அறிந்தது.
மேலும் தங்கள் அம்மாவின் அறிகுறிகளுக்கு தாங்கள்தான் காரணம் என்று குழந்தைகள் கருதினால், அதை சரியாக்குவதற்காக அவர்கள் ஏதாவது செய்வார்கள், பயனில்லாத உத்திகளை காப்பியடித்து பயன்படுத்த முயற்சிப்பார்கள் என்று அவர் கூறுகிறார்.
தாங்கள்தான் தங்கள் தாயின் மன அழுத்தத்திற்கு காரணம் என்று எண்ணுவது அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் குறைக்கலாம், தங்களால் உதவமுடியவில்லை என்றும் வருந்தலாம். தோல்விமனப்பான்மை ஏற்படலாம் என்று கவுராஸ் கூறுகிறார். மேலும் மனஅழுத்தத்துடன் உள்ள தந்தைகளுக்கும், இதேபோல் அறிகுறிகள் உள்ளதா என்பது குறித்தும் ஆராய்ச்சி செய்யவேண்டும் என்று அவர் கூறுகிறார்.
தமிழில்: R.பிரியதர்சினி.
credit indianexpress.com