எடப்பாடியை ஆளுநர் சந்திப்பார், ஆனால், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க மாட்டார், உட்கட்சியில் நிலவும் குழப்பத்தைக் காரணம் காட்டி இன்னும் சில நாட்கள் இழுத்தடிப்பார் என்றுதான் தோன்றுகிறது, ஓ.பன்னீர்செல்வம் பாரதீய ஜனதாவின் ஆட்டத்தை கச்சிதமாக நடத்துகிறார்.
ஒரு அடிமையை வைத்துப் சில பலம் வாய்ந்த காய்களை வீழ்த்தும் காவிகளின் திட்டத்தில் இதுவரை தடுமாற்றங்கள் இல்லை, ஓ.பன்னீர்செல்வம் முதலில் ஜெயாவின் அடிமை, இப்போது பாரதீய ஜனதாவின் அடிமை. அவரது முகத்தில் திடீரென்று இப்போது தவழும் புன்னகையும், ஒளி வட்டமும், ஊழல் வழக்குகள் மற்றும் அடித்த கொள்ளைகளில் இருந்து தப்பித்த ஆசுவாசமே தவிர வேறு ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது.
சிக்கிய அடிமையின் புரட்சி நாடகத்தை வைத்துக் கொண்டு இன்னும் சில காலம் காவிகள் தங்கள் பார்ப்பனீய உள்ளீடுகளை செய்வார்கள், ஓ.பி.எஸ் என்கிற ஊழல் மயப்பட்ட அ.தி.மு.கவின் அடிமை உறுதியாக முதல்வராவார். குறிப்பிட்ட காலத்தில் அவர் பாரதீய ஜனதாவில் ஐக்கியமாக வேண்டும்.
இல்லையென்றால் நீதித்துறை அடியாட்களை வைத்து சசிகலாவை வீழ்த்தியதை விட மோசமாக வீழ்த்துவார்கள் காவிகள். மொத்தத்தில் திராவிட இயக்கத்தின் மூலமாக அரசியல் மயப்பட்டு இன்னும் மேம்பட்ட அரசியலை நோக்கிப் போயிருக்க வேண்டிய தமிழ்ச் சமூகத்தின் அரசியல் ஒரு பார்ப்பனத் தலைமையால் நோயுற்று வீழ்ந்து அவர்களின் கைகளில் எளிதாகக் கொடையளிக்கப்படுகிறது.
கலைஞர் என்கிற ஆலமரம் மூப்பில் வீழ்கிற அந்த ஒரு நாளில் தமிழகம் இன்னுமொரு ஹிந்திய மாநிலமாக மாறி மோடியின் புகழ் பாடி மங்களமாய்த் தன் அழிவை நோக்கிப் பயணிக்குமா? அல்லது மூர்க்கமாய் காவிகளின் சூழ்ச்சியை எதிர்கொண்டு வெல்லுமா என்பதை வரும் நாட்கள் சொல்லக்கூடும்.
இது அ.தி.மு.கவுக்கு மட்டுமல்ல தி.மு.கவுக்கும், இங்கிருக்கும் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், ஒவ்வொரு தமிழ்க் குடிமகனுக்கும் சோதனைக் காலம். வீறு கொண்ட எமது இளையோர் காவிகளின் உள்ளடங்குத் திட்டங்களை அடையாளம் கண்டு விரட்டுவார்களா???
http://kaalaimalar.net/vidyasagar-rao-to-bjp/