தமிழகத்தில் பெப்சி உள்ளிட்ட குளிர்பானங்களுக்கு தடை விதித்திருப்பது நாட்டின் ஜனநாயக மாண்பிற்கு எதிரானது என மத்திய உணவு பதப்படுத்தல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தெரிவித்துள்ளார்.
பன்னாட்டு நிறுவன தயாரிப்புகளான, பெப்சி உள்ளிட்ட குளிர்பானங்களை தமிழக வியாபாரிகள் மார்ச்1ம் தேதி முதல் விற்பனை செய்யமாட்டார்கள் என ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வர்த்தகர்கள் சங்கம் அறிவித்தது. அதையடுத்து நேற்று முதல் பெரும்பாலான கடைகளில் பெப்சி, கோக் விற்பனை நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் கூறும்போது,
தமிழகத்தில் பெப்சி மற்றும் கோககோலா உள்ளிட்ட குளிர்பானங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது நாட்டின் ஜனநாயக மாண்பிற்கு எதிரானது. நாட்டு மக்கள் அனைவருக்கும், தாங்கள் விரும்பும் உணவை உட்கொள்ள உரிமை உள்ளது. இதுபோன்ற செயல்கள் கள்ளச் சந்தை வியாபாரத்தை அதிகரிக்கும். எனவே, தமிழக வியாபாரிகளின் செயல் ஏற்கத்தக்கதல்ல என்று கூறினார்.
பார்க்க வீடியோ
source: kaalaimalar