திங்கள், 27 மார்ச், 2017

நெடுவாசலை கார்நாடக எம்.பி.க்கு தாரை வார்த்த மத்திய அரசு.

இயற்கை எரிவாயு எடுக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய பெட்ரோலியத்துறைக்கும், எரிவாயு எடுக்கும் நிறுவனங்களுக்கும் இன்று கையெழுத்தானது.
இதன்படி நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படும். இதில் தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியும் அடங்கும்.
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முன்னாள் பாஜக எம்.பி.க்கு சொந்தமான நிறுவனம் எரிவாயு எடுக்கும் திட்டத்தை மேற்கொள்ள இருக்கின்றது.
ஏற்கெனவே தமிழகத்திற்கும் கர்நாடக மாநிலத்திற்கும் காவிரி நீர் பிரச்சனை இருக்கும் பொழுது தற்போது மத்திய அரசு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த எம்.பி., நிறுவனத்திற்கு அனுமதி அளித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.