அரசு ஊழியர்கள் தினமும் 18 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை பணியாற்ற வேண்டும் என உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோ அருகே உள்ள கோரக்பூரில் நடந்த பாஜக கூட்டத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் குறைகள் ஏற்பட்டால், அதை பொறுத்து கொள்ள முடியாது என்றும், அரசு ஊழியர்கள் தினமும் 18 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஒருவேளை கடுமையாக உழைக்க அதிகாரிகள் தயாராகவில்லை எனில், பணிகளில் இருந்து அவர்கள் விடுபடலாம் என்றும் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். பதவியேற்றது முதல் இவர் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது