வியாழன், 30 மார்ச், 2017

கோடையில் இருந்து காத்துக்கொள்ள சில ஸ்மார்ட் டிப்ஸ்

வெளியில் செல்லவே முடியவில்லை. வாட்டி எடுக்கிறது வெயில். அதற்காக வெளியில் போகாமல் இருக்க முடியுமா என்ன? வாட்டி எடுக்கும் கோடை வெயிலை சமாளிக்க என்ன செய்யலாம்?
ஒருநாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் பருகலாம். நொறுக்கு தீனிகளை தவிர்த்து இளநீர், மோர் போன்ற பானங்களையும், பழங்களை சாப்பிடலாம்.
உடல் சூட்டை தவிர்க்க வாரம் இருமுறை ஆயில் பாத் எடுத்து கொள்ளலாம். கோடை வெயிலில் வியர்வை அதிகரிப்பதால் முடி உதிரும் பிரச்னை ஏற்படும். எனவே ஷாம்பு கொண்டு அலச வேண்டும்.
முடியை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வெந்தயம் அல்லது தயிரை பேஸ்ட் செய்து அதனை தலைக்கு தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து பின் அலசலாம்
வெயிலின் தாக்கத்தால் உதடுகளில் வெடிப்பு ஏற்படும் இதனை தடுக்க தூங்க செல்வதற்கு முன்பு பாலேட்டை சிறிதளவு எடுத்து உதட்டில் தடவிவிட்டு காலையில் அதனை சிறிதளவு காட்டனில் பன்னீரை நனைத்து துடைக்க வேண்டும்
குளிர்ச்சி தன்மை கொண்ட கற்றாலையை சருமத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் குளிர்ச்சி தன்மை ஏற்படுவதுடன் முகம் பளபளப்பாகும். படுப்பதற்கு முன்பு வாஸ்லின் அல்லது வெதுவெதுப்பான தேங்காய்ப்பால் எடுத்து முகத்தில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்வதன் மூலம் சருமம் வறண்டு போவது கட்டுப்படுத்தப்படும்.
வெயிலில் இருந்து சருமத்தையும், தேகத்தையும் பாதுகாக்க வெளியே செல்லும் போது தலைக்கு துணி அணிந்து அல்லது குடை எடுத்துச் செல்லவும். வெயிலுக்கேற்றபடி ஹேர் கட் செய்வதும் நல்ல பலன் தரும்.