திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கொடுத்த தவறான அறிக்கையால் பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள் தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளதாக மனிதநேய மக்கள் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
26/3/2017, தாமிரபரணியில் இருந்து உபரி நீரை மட்டும் தான் பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள் எடுப்பதாக, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளித்துள்ளார். அவரது தவறான அறிக்கையை கண்டித்து, மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஜவாஹிருல்லா, வற்றாத ஜீவநதியான தாமிரபரணியில் கடும் வறட்சி நிலவும் நிலையில், தாரைவார்க்கப்பட்ட தாமிரபரணியை மீட்க வேண்டுமென வலியுறுத்தினார்.