திங்கள், 27 மார்ச், 2017

வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.




26/3/2017, மத்திய அரசு சமீபத்தில் நிதி மசோதாவில் 40 திருத்தங்களை கொண்டுவந்தது. திருத்தப்பட்ட நிதி மசோதாவிலுள்ள சில முக்கிய அம்சங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

2017-18ம் ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டால் ரூ. 5000 அபராதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

31 டிசம்பர் 2018 க்கு மேல் வருமான வரி தாக்கல் செய்தால் ரூ 10,000 அபராதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரொக்க பரிமாற்ற உச்சவரம்பை ரூ.3 லட்சமாக இருக்கும் என நிதியமைச்சர் அருண்ஜெட்லி பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்திருந்தார். தற்போது திருத்தப்பட்ட நிதி மசோதாவில் ரொக்கப்பரிமாற்ற உச்சவரம்பு ரூ.2 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது.