திங்கள், 27 மார்ச், 2017

தேவைப்பட்டால் யாரையும் செருப்பால் அடிப்போம்ல – சிவசேனா தலைவன் திமிர் பேச்சு.

தேவைப்பட்டால் யாரையும் அடிப்போம்ல…. சிவசேனா தலைவர் திமிர் பேச்சு…
யாரையும் தாக்குவது சிவசேனாவின் கலாச்சாரம் அல்ல என்றும் ஆனால் தேவைப்பட்டால் யாரையும் அடிக்க தயங்கமாட்டோம் என சிவசேனா  கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் அதிரடியாக கூறியுள்ளார்.
அண்மையில் சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்  ரவீந்திர கெய்க்வாட்  டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமான நிறுவன மேலாளர் சுகுமார் என்பவரை 25 முறை செருப்பால் அடித்து சர்ச்சையில் சிக்கினார்.
இதையடுத்து அவருக்கு விமானத்தில் பயணம் செய்ய பல நிறுவனங்கள் தடை விதித்தன. இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்வு குறித்து  சிவசேனா மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத்திடம்  மும்பையில் நிருபர்கள் கருத்து கேட்டனர்.
 

அப்போது, பேசிய அவர், எங்கள் கட்சியின் எம்.பி. இவ்வாறு நடந்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டது ஏன்? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தார். மேலும் யாரையும் தாக்குவது சிவசேனாவின் கலாசாரம் அல்ல என்றும்  அதே நேரத்தில்  தேவைப்படும்போது, தேவைப்படும்  இடங்களில் நிச்சயம் யாரையும் அடிக்க சிவசேனா தயங்காது என அதிரடியாக தெரிவித்தார்.
ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் மோசமான சேவை காரணமாக ஒரு எம்.பி. மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான பயணிகளும் சிரமம் அனுபவிக்கின்றனர் என்றும்  தங்களுடைய விமானத்தில் பயணம் செய்ய எங்கள் எம்.பி.க்கு தடை விதிக்க எடுக்கப்பட்ட முடிவை போல், அதன் சேவையை உயர்த்துவதிலும் துரிதமாக செயல்பட்டால் நலமாக இருக்கும் என்றும் சஞ்சய் ராவத் தெரிவித்தார்.