திங்கள், 27 மார்ச், 2017

லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது சந்திரபாபு நாயுடுவின் நதிநீர் இணைப்புத் திட்டம்! March 27, 2017

லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது சந்திரபாபு நாயுடுவின் நதிநீர் இணைப்புத் திட்டம்!


ஆந்திராவின் நதிநீர் இணைப்பு திட்டமான “பட்டிசீமா நீர்பாசனத்திட்டம்” லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

ஆந்திர பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் கோதாவரி நதி மற்றும் கிருஷ்ணா நதியை இணைக்கும் திட்டத்தை ஒரே ஆண்டில் செயல்படுத்தியதற்காக லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் கிடைத்துள்ளது.

“பட்ஜெட் ஒதுக்கீட்டில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் ஒரே ஆண்டில் நிறைவேற்றப்பட்டுள்ள நாட்டிலேயே முதல் வேகமான நதிநீர் இணைப்புத் திட்டம் இது” என லிம்கா புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. லிம்கா புத்தகத்தில் இந்த திட்டம் இடம் பெற்றுள்ளது பெருமை அளிப்பதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டுள்ளார்.

ஆண்டுதோறும் 3000 டி.எம்.சி கோதாவரி ஆற்று நீர் கடலில் கலப்பதால், அதன் சிறுபகுதியை தடுத்து மேற்கு கோதாவரி மாவட்டத்தின் பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் பயன்படுத்தும் வகையில் ஆந்திர அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

பட்டிசீமா திட்டத்தின் படி, ஆண்டு தோறும் 120 டி.எம்.சி கோதாவரி நீர் கிருஷ்ணா நதிக்கு திரும்பிவிடப்படும். இதன்மூலம் கிருஷ்ணா டெல்டா மற்றும் ராயலசீமா மாவட்டங்களின் நீர் தேவையை பூர்த்தி செய்ய இயலும்