ஞாயிறு, 26 மார்ச், 2017

நாட்டின் மின்சார தேவையை மரபுசாரா உற்பத்தி மூலம் இந்தியா பூர்த்தி செய்யும் என தகவல்!

நாட்டின் மின்சார தேவையில் 60 சதவீதத்தை, அடுத்த 10 வருடங்களில்,  மரபுசார உற்பத்தி மூலம் இந்தியா பூர்த்தி செய்யும் என உலக பொருளாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் மரபுசாரா எரிசக்தி திட்டங்களின் பங்களிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. சுற்றுச் சூழலுக்கு நண்பனாக விளங்கும் மரபு சாரா எரி சக்தி திட்டங்களுக்கு உலகம் முழுவதுமாக ஆதரவு பெருகி வருகிறது. 

இதனை கருத்தில்கொண்டு, இந்தியாவில் காற்றாலை, சூரியஒளிசக்தி போன்ற மரபு சாரா மின் உற்பத்தி திட்டங்களில் ஜப்பான், பிரான்ஸ் போன்ற மேலை நாடுகளின் முதலீடுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டில் தமிழகத்தில் உலகின் மிகப்பெரிய அளவில் சூரியசக்தி மின் உற்பத்திக்காக ராமநாதபுரம் கமுதியில் 648 மெகாவாட் மின் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது. 

இதுபோன்ற திட்டங்களின் வாயிலாக, நாட்டின் மின்சார தேவையில் 60 சதவீதத்தை, அடுத்த 10 வருடங்களில்,  மரபுசார உற்பத்தி மூலம் இந்தியா பூர்த்தி செய்யும் என்று உலக பொருளாதார அமைப்பு தெரிவித்துள்ளது.