திங்கள், 27 மார்ச், 2017

உள்நாட்டு விமான சேவையில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளிய இந்தியா!

உள்நாட்டு விமான சேவையில், அதிகளவு பயணிகள் பயணம் செய்த பட்டியலில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்திய 3வது இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை மையமாக கொண்டு செயல்படும் ஆசிய பசிபிக் ஏவியேஷன் மையம் ஆண்டு தோறும், விமான சேவைகள் தொடர்பான அறிக்கையை வெளியிட்டு வருகிறது. 

இந்நிலையில், கடந்த ஆண்டு உள்நாட்டு விமான சேவையில், அதிகளவு பயணிகள் பயணம் செய்த பட்டியலில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்தியா 3ம் இடத்தை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் உள்நாட்டு விமானங்களில் 10 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். இந்த பட்டியலில் 71 கோடி பயணிகளுடன் அமெரிக்கா முதலிடத்திலும், 43 கோடி பயணிகளுடன் சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளது.

ஜப்பானில் கடந்த ஆண்டு 9 கோடியே 70 லட்சம் பயணிகள் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.