திங்கள், 27 மார்ச், 2017

சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற சிறைக் கைதிகள் March 27, 2017

4 கைதிகளின் பெயர் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. சண்டிகரின், பொன்ட்சி சிறையின் கைதிகள் ரோஹித் பகரே, அனூப் சிங்உ, பலவாந் சிங் மற்றும் 
அஜித் சிங் உருவாக்கிய பீனிக்ஸ் என்னும் அலைபேசி சேவையால் அவர்களது பெயர்கள் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

இந்த பீனிக்ஸ் சேவையால் சிறை உணவகங்களில் பணமற்ற பரிவர்த்தனை சாத்தியப்படும், கைதிகளின் வழக்கு வரலாறை பற்றி எளிமையாக தெரிந்துகொள்ளமுடியும் மற்றும் பார்வையாளர்கள் கைதிகளின் சந்திப்பு கணினியில் பதியப்படுவதால் நேரத்தை சேகரிக்க முடியும். 

இந்த சேவை ஹரியானாவில் உள்ள 11 சிறைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. வேலைநிமித்தமாக கைதிகள் சிறையில் இருந்து வெளியே செல்வது இதுவே முதல்முறை 
ஆகும். விடுதலை அடைந்த மின்பொறியாளர் அமித் மிஸ்ரா ஆரம்பித்த இந்த முயற்சியை ரோஹித் பகரே, அனூப் சிங்உ, பலவாந் சிங் மற்றும் அஜித் சிங் மிஸ்ராவின் உதவியோடு முடித்துவைத்தனர். 

மிஸ்ராவின் விடுதலைக்கு முன்பு இந்த சேவையை அவர் 8 சிறைக்கு அளித்துள்ளார். கைதிகள் சிறை உணவகத்தை கணினிமயமாக்குவதாக விருப்பம் தெரிவித்ததால் இந்த பீனிக்ஸ் சேவையை இவர்கள் உருவாக்கினார்கள் என்றும் இது கைதிகளுக்கு மட்டும் அல்லாமல் சிறைக்கும் பெருமை என்றும் பொன்ட்சி சிறை அதிகாரி ஹரேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.