காஷ்மீரில் போராட்டக்காரர்களை ஒடுக்க ,பெல்லட் துப்பாக்கிகளைத் தவிர்த்து, மாற்று வழிமுறைகளை பயன்படுத்துமாறு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காஷ்மீர் போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக கடந்த சில ஆண்டுகளாக பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெல்லட் துப்பாக்கியால் சுடும்போது குண்டுகள் நூற்றுக்கணக்கான துண்டுகளாக சிதறி இலக்கை தாக்கும் தன்மையுடையதாகும்.
எவ்வித உயிரிழப்பும் ஏற்படாமல் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு இத்துப்பாக்கியை பயன்படுவதாக காஷ்மீர் போலீசார் தெரிவித்தாலும், பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்டு இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், நூற்றுக்கணக்கானோர் தங்களின் கண்பார்வை இழந்துள்ளனர். எனவே, பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்த தடை வித்க்க வேண்டும் என்று காஷ்மீர் வழக்கறிஞர்கள் சங்கம், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இருப்பினும் காஷ்மீர் உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது .
இதையடுத்து, பெல்லட் துப்பாக்கிகளுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணையில், பெல்லட் துப்பாக்கிகளால் உயிரிழப்புகள் ஏற்படுவதால், போராட்டக்காரர்களை ஒடுக்க மாற்று வழிமுறைகளை பின்பற்றலாமே என நீதிமதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், பெல்லட்டுக்கு மாற்றாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் என்னவென்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, வழக்கு விசாரணை ஏப்ரல் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.