செவ்வாய், 28 மார்ச், 2017

பொய் தகவல் பரப்பும் டைம்ஸ் நவ் செய்தி ஆசிரியர் அர்ணாப் கோஸ்வாமியை உள்ளே நுழைய விடாமல் விரட்டியடித்த நிறுவனம்! – வீடியோ ரிப்போர்ட் !


டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் முக்கிய விவாத நிகழ்ச்சி நியூஸ் ஹவர். இதனை தொகுத்து வழங்கி வந்தவர் அர்ணாப் கோஸ்வாமி.
இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. ஆனாலும் அவரது தனிப்பட்ட கருத்துக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின.
இதனால் அவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து அந்த தொலைக்காட்சியில் இருந்து வெளியேறி தனி தொலைக்காட்சி தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் டைம்ஸ் நவ்வில் தனக்கு நிகழ்ந்த அவமானங்கள் விளக்கியதாக நியூஸ் மினிட் தளம் சில தகவல்களை வெளியிட்டுள்ளது.
டிசம்பர் 15 ஆம் தேதி அவர் தனது பதவியை ராஜினாமா செய்யும் முன்பு, அதாவது இரண்டு நாட்களுக்கு முன்பாக ஸ்டியோவிற்குள் தன்னை நுழைய விடாமல் தடுத்து விரட்டியடித்ததாக கூறியுள்ளார். இதனால் கடும் மன வேதனை அடைந்ததாகவும் கூறியுள்ளார்.
source: kaalaimalar.net 

Related Posts: