ஞாயிறு, 26 மார்ச், 2017

எல்லைப் பாதுகாப்பு படையின் 50 ஆண்டுகால வரலாற்றில் முதல் பெண் அதிகாரி !

இந்தியாவின் எல்லை பாதுகாப்பு படையின் 50 ஆண்டுகால வரலாற்றில், முதல் முறையாக பெண் அதிகாரி ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

25/3/2017, இந்திய துணை இராணுவங்களில் ஒரு பிரிவான மத்திய எல்லைப் பாதுகாப்புப் படை, 1965ல் உருவாக்கப்பட்டது.மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இப்படைப்பிரிவின் முக்கிய பணி, எல்லை ஊடுருவலைத் தடுப்பதும், எல்லையைப் பாதுகாப்பதுவும் ஆகும். இரண்டரை லட்சம் வீரர்களைக் கொண்ட இப்படைப்பிரிவில் ’முதல் பெண் அதிகாரி’யாக ராஜஸ்தானை சேர்ந்த 25 வயதான ’தனுஸ்ரீ பாரிக்’ தேர்வாகியுள்ளார்.

’பிகானீர்’ நகரைச் சேர்ந்த தனுஸ்ரீ, 2014-ம் ஆண்டு நடைபெற்ற ‘யு.பி.எஸ்.சி.’ தேர்வில் தேர்ச்சி பெற்று, பின் பயிற்சியில் திறம்பட செயலாற்றி, தற்போது கமேண்ட் அதிகாரியாக தேர்வாகியுள்ளார். தனுஷியின் பதவியேற்பின் போது,அவரது  தோல் படையில் ‘ரேங் நட்சத்திரத்தை’ பொறுத்தி வாழ்த்துகளை தெரிவித்தார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். தனுஷி பஞ்சாபில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பணியாற்றவுள்ளார்.