திங்கள், 27 மார்ச், 2017

அடிக்கடி பழுதாகும் குடிநீர் குழாய்களால் பல லட்சம் தண்ணீர் வீணாகும் அவலம்! March 27, 2017

அடிக்கடி பழுதாகும் குடிநீர் குழாய்களால் பல லட்சம் தண்ணீர் வீணாகும் அவலம்!


கடந்த ஆண்டு பெய்ய வேண்டிய பருவமழை பெருமளவு பொய்த்துப் போனதால் தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குடிக்க தண்ணீர் கிடைக்காததால் காலிகுடங்களுடன் பல கிலோமீட்டர்களுக்கு மக்கள் காத்திருக்கின்றனர். டேங்கர்கள் மூலம் வினியோகிக்கப்படும் தண்ணீர் குடம் 10 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் நிலைமை இப்படி இருக்க, சேலத்தில் குடிநீர் குழாய் பழுதடைந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாய் வெளியேறி சாக்கடையில் கலக்கும் நிகழ்வு அடிக்கடி நடக்கிறது. நேற்று அழகாபுரம் பகுதியில் பாலம் அமைக்கும் பணியின் காரணமாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பெருமளவு வெளியேறி வீணானது. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து 24 மணி நேரத்துக்கு பிறகே சரி செய்தாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாய் பழுதை சரி செய்ய பலமுறை அதிகாரிகளிடம் கோரியும் கண்டுகொள்ளாததால் மாணவர்களே உடைப்பை சரிசெய்யும் பணியில் இறங்கினர். பின்னர் மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து அவசர அவசரமாக உடைப்பை சரிசெய்தது குறிப்பிடத்தக்கது