திங்கள், 27 மார்ச், 2017

தகவல் பெறும் உரிமை சட்டத்தில்,


உங்கள் ஊராட்சி பற்றி தகவல் கேட்க போகிறர்கள் என்றால்,
உங்கள் ஊராட்சி அலுவலகத்தில் பொது தகவல் அலுவலர் என்ற ஒருவர் இல்லை,
ஆதலால் உங்கள் ஊராட்சி அலுவலகத்திற்கு உங்கள் தகவல் சட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டாம்,
அப்படி மீறி அனுப்பினால்,கடிதம் அனுப்பிய உங்களுக்கே திருப்பி அனுப்பபடும்,இந்த தவறை செய்யாதீர்கள்,.
ஊராட்சி அலுவலகத்தில் இருக்கும் ஊராட்சி செயலாளர் என்பவர் ,உதவி பொது தகவல் அலுவலராக செயல்படுவார்,
ஆனால் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் வரும் விண்ணப்பங்களை பெற்று அதற்கு அவர் பதிலளிக்க தேவையில்லை,.
உங்கள் ஊராட்சி பற்றி தகவல் சட்டத்தில் கேட்க போகிறர்கள் என்றால்,உங்கள் ஊராட்சிகளின் ஒன்றிய அலுவலகம்,இந்த ஒன்றிய அலுவலகம் என்பது வட்டார வளர்ச்சி அலுவலகம் என்பது தான்,
ஆதலால்,உங்கள் கடிதத்தை வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு அனுப்பி வையுங்கள்,
வட்டார வளர்ச்சி அலுவலகம் என்பது ஆங்கிலத்தில் BLOCK DEVELOPMENT OFFICE,
ஒன்றிய அலுவலகம் என்பது UNION OFFICE.
வட்டார வளர்ச்சி அலுவலகம் என்பதும் ஒன்றிய அலுவலகம் தான்,இரண்டும் ஒன்று தான்.
கீழே உள்ள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்,
பெறுனர்,
பொது தகவல் அலுவலர்,
த.பெ.உ.ச -2005,
வட்டார வளர்ச்சி அலுவலகம்,
இடம் பெயர்_________
__________________
மாவட்டம்_________
..கீழே ஒரு மாதிரி விண்ணப்பமாக ,சின்னதாக எழுதுகிறேன்.,
அனுப்புனர்,
456789sdasd
dfasf
__________
__________
பெறுனர்,
பொது தகவல் அலுவலர்,
த.பெ.உ.ச -2005,
வட்டார வளர்ச்சி அலுவலகம்,
இடம் பெயர்_________
__________________
மாவட்டம்_________
ஐயா / அம்மா,
பொருள் : தகவல் பெறும் உரிமை சட்டம் 2005 சட்டப்பிரிவு 6(1)-இன் கீழ் தகவல் கோருவது தொடர்பாக.....
கோரப்படும் தகவல்கள் / ஆவணங்கள் விபரம் :
1. கடந்த 2014 ஆம் ஆண்டின் வரவு செலவு கணக்கு தகவல்களை தரவும்.
2.கடந்த 2014 ஆம் ஆண்டு எங்கள் ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட அரசு நிதி பற்றி தகவல்கள் தரவும்.
3.________
4__________
5___________
6__________
இப்படிக்கு,
zxcvbnfyuio
இவ்வாறு ஒரு வெள்ளை பேப்பர் ல எழுதி விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.
ஆங்கிலத்தில் பெறுனர் முகவரி,
TO,
THE PUBLIC INFORMATION OFFICER,
RTI -2005,
BLOCK DEVELOPMENT OFFICE,
PLACE _______
_____________.