திங்கள், 27 மார்ச், 2017

லெக்கின்ஸ் அணிந்து வந்ததால் விமானத்தில் செல்ல தடை

அமெரிக்காவில் பயணிகள் விமானத்தில் பெண்கள் லெக்கின்ஸ் உடை அணிந்து வந்ததால் அவர்களுக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் தடைவிதித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மின்னெ போலீஸ் நகருக்கு செல்லவிருந்த பயணிகள் விமானத்தில் 2 பெண்கள் லெக்கின்ஸ் உடை அணிந்து பயணம் செய்ய வந்ததால் அவர்களை தடுத்து நிறுத்தி உடையை மாற்றினால் தான் நீங்கள் விமானத்தில் பயணிக்க முடியும் என அதிகாரிகள் உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஒரு பெண் லெக்கின்ஸ் மீது வேறு உடை அணிந்து பயணத்தை தொடர்ந்தார். மற்றொருவர் விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.
அனைத்து பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் பாதுகாப்பு கருதியே இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. மேலும் எங்களது விமானங்களில் பயணம் செய்பவர்கள் செருப்பு இல்லாமலோ, முறையாக ஆடை அணியாமலோ இருந்தால் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயணம் செய்பவர்கள் மட்டுமின்றி, விமான நிறுவன ஊழியர்களும் இதுபோன்ற ஆடைகள் அணியக் கூடாது என்பது யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விதியாகும்.