ஞாயிறு, 26 மார்ச், 2017

​உ.பி முதல்வரின் நடவடிக்கையால் பட்டினி கிடக்கும் சிங்கங்கள்! March 25, 2017

​உ.பி முதல்வரின் நடவடிக்கையால் பட்டினி கிடக்கும் சிங்கங்கள்!


உத்தரபிரதேசத்தில் சட்ட விரோதமாக இயங்கியதாகக் கூறி, மாட்டிறைச்சி கூடங்கள் மூடப்பட்டதால், உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

உத்தர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற பிறகு, லக்னோவில், சட்டவிரோதமாக இயங்கி வந்ததாகக் கூறி மூன்று மாட்டிறைச்சிக் கூடங்கள் மூடப்பட்டது. இங்கு, தயார் செய்யப்படும் மாட்டிறைசிகள்தான் லக்னோவின் பெரும்பாலான பகுதிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் அந்நகரில் சமீபகாலமாக மாட்டிறைச்சிக்கான தட்டுப்பாடு அதிகரித்து வந்ததது. இதனால் அந்நகரின் உயிரியல் பூங்காக்களில் பாதுகாக்கப்பட்டு வரும் சிங்கம், புலி, ஓநாய் முதலிய நூற்றுக்கணக்கான மிருகங்களுக்கு உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, லக்னோவில் உள்ள உயிரியல் பூங்கா அதிகாரிகள் கூறுகையில், “ இங்குள்ள விலங்குகளுக்கு, ஒரு நாளைக்கு 235 கிலோ மாட்டிறைச்சி தேவைப்படுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள இந்த மாட்டிறைச்சி தட்டுப்பாட்டால், வெறும் 80 கிலோ மாட்டிறைச்சியே விலங்குகளுக்கு கொடுக்கப்படுகிறது. சிங்கம்,புலி,சிறுத்தை, கழுதைப்புலி, ஓநாய், குள்ள நரி உள்ளிட்ட பெரும்பாலான மிருகங்கள் மாட்டிறைச்சியை தான் விரும்பி உண்ணுகின்றன. வெறும் கோழி மற்றும் ஆட்டுக்கறியால், விலங்களுக்கு போதுமான ஊட்டச்சத்துகள் கிடைப்பதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உ.பி காங்கிரஸ் எம்.பி ஆதிர் ராஜன் கூறுகையில், ”போகிற போக்கை பார்த்தால் சிங்கங்கள் அனைத்தும், ’பாலக் பன்னீரைதான்’ உண்ண வேண்டும் எனக் கூறுவார்கள் போல” என்று தெரிவித்தார்.

Related Posts:

  • தேச விரோத சட்டம்தேச விரோத சட்டம் நீக்கப்படுமா? தலைமையக ஜுமுஆ இரண்டாம் உரை - 13.05.2022 உரை: ஆர்.அப்துல் கரீம் M.I.Sc (மாநிலப் பொதுச்செயலாளர்,TNTJ ) https://youtu.… Read More
  • தவிர்க்க வேண்டிய சோம்பல்தனம்..தவிர்க்க வேண்டிய சோம்பல்தனம்.. தலைமையக ஜுமுஆ - 13.05.2022 உரை: ஆர்.அப்துல் கரீம் M.I.Sc (மாநிலப் பொதுச்செயலாளர்,TNTJ ) https://youtu.be/IMt6j37qC… Read More
  • ஹிஜாப் ஏன் எதற்கு?ஹிஜாப் ஏன் எதற்கு? பொறையார் - மயிலாடுதுறை மாவட்டம் ஆர். அப்துல் கரீம் M.I.Sc (மாநிலப் பொதுச்செயலாளர்,TNTJ ) பொதுக்கூட்டம் - 20.03.2022 https://yo… Read More
  • தடம் புரளாத தவ்ஹீத் கொள்கைதடம் புரளாத தவ்ஹீத் கொள்கை மஸ்ஜிதுர்ரஹ்மான் ஜுமுஆ - மேலப்பாளையம் - 16-05-2022 உரை : எம். ஷம்சுல்லுஹா ரஹ்மானி (மேலாண்மைக்குழு தலைவர், TNTJ) … Read More
  • இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 23 4 2022 வியாழக்கிழமை பெரிய தஸ்பீஹ் தொழுகை மார்க்கத்தில் அனுமதி உண்டா? (இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்) சங்கரன்கோவில் - தென்காசி மாவட்டம் - 23-04-2022 பதில் : … Read More