Breaking News
Loading...
புதன், 29 மார்ச், 2017

Info Post

இமாலயத்திலிருந்து குமரி வரை ஓடும் இந்தியாவின் ஜீவா நதிகளை இணைப்பது குறித்த பூர்வாங்க முடிவுகளுக்கு இப்போதுதான் வந்துள்ளது இந்திய அரசு….


மாலயத்திலிருந்து குமரி வரை ஓடும் இந்தியாவின் ஜீவ நதிகளை இணைப்பது குறித்த பூர்வாங்க முடிவுகளுக்கு இப்போதுதான் வந்துள்ளது இந்திய அரசு. நாட்டின் நதிகளை இணைத்துவிட்டால் விவசாயமும், பொருளாதாரமும் தழைத்தோங்கும் என்பதை இதுவரை நாம் செவிவழிச் செய்தியாகவும், வல்லுனர்களின் கூற்றாகவும் கேள்விப்பட்டிருப்போம். இத்திட்டத்தை செயல்படுத்துவதன் முதல்கட்ட நகர்வாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு 2009ம் ஆண்டிலேயே மத்திய அரசிடம் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. நாட்டில் உள்ள முப்பது ஜீவநதிகளை இணைக்க சாத்தியக்கூறுகள் இருப்பதாக அந்த ஆய்வறிக்கை கூறியது. இமாலயத்த பிறப்பிடமாக கொண்டிருக்கும் கோசி, காக்ரா, கங்கா, யமுனா,மானஸ், சாரதா, தீஸ்தா உள்ளிட்ட 14 ஆறுகளையும், தென்னிந்தியாவின் கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, பாலாறு, பெண்ணாறு உள்ளிட்ட 16 ஆறுகளையும் இணைப்பதற்கான வழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் இந்த ஆய்வுகள் முழுவடிவம் பெறுவதற்குள் மூன்று அரசுகள் மாறிவிட்டன. திட்டமதிப்பிலும் அபார உயர்வு ஏற்பட்டது.
மகாநதி-கோதாவரி நதிகளையும், கோதாவரி-கிருஷ்ணா நதிகளையும் இணைக்க முடியும். கோதாவரி-கிருஷ்ணா நதிகளை மூன்று இடங்களில் இணைக்க முடியுமென்றும் ஆய்வறிக்கை கூறியிருக்கிறது. ஸ்ரீசைலத்தில் கிருஷ்ணா நதியுடன் பெண்ணாறு நதியையும், சோமசீலம், கிராண்டு, அனிகட் பகுதியில் பெண்ணாறு-காவிரி நதிகளையும் இணைக்க முடியும். கட்டளை மற்றும் குண்டாறு ஆகியவற்றுடன் காவிரி-வைகை ஆறுகளை இணைக்க முடியும். மேலும் பம்பா-அச்சன்கோவில்-வைப்பாறு, நேத்ராவதி-ஹேமாவதி, பேட்தி-வாரதா ஆறுகளின் இணைப்புக்கும் சாத்தியம் இருப்பதாக தெளிவுபடுத்தியது அந்த ஆய்வறிக்கை.
மேற்சொல்லப்பட்ட அனைத்து நீர் வழிகளும் கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் உயரத்தில் இருக்கிறது என்றால், எவ்வளவு ஆராய்ச்சிகளுக்கு பிறகு இதன் வடிவமைப்பு திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்கு புரியும்.
bn-jo738_indkal_g_20150727143130
ஆனால் நாட்டின் இரத்தநாளங்களாக விளங்கும் நதிகளை இணைப்பதில் மறைந்த நம் அப்துல்கலாம் ஐயாவும் கூட ஆர்வமாகவே இருந்தார். தன்னுடைய விஞ்ஞான அறிவினைக் கொண்டு அவர் சில ஆய்வுகளையும் மேற்கொண்டிருந்தார். மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் பல்வேறு கருத்துக்கள் முட்டி மோதுவதில் ஆச்சரியம் இல்லை. நதியிணைப்பு என்பது சாத்தியமற்ற ஒன்று, அது மிகப்பெரிய சவால் என சொல்லுவதில் அர்த்தமில்லை என்றார் கலாம். இந்தியாவின் 54 கோடி இளைஞர்கள் ஒன்றுபட்டு நின்றால், இத்திட்டத்தை செயல்படுத்தி வெற்றியடைய முடியும். இளைஞர் சமுதாயத்தால் மட்டுமே எந்த பிரச்சினைகளையும் தைரியத்துடன் எதிர்கொண்டு வெற்றி அடைய முடியும் என நம் இளைஞர்கள் மீது தன் நம்பிக்கை விதையை ஊன்றிச் சென்றார்.
_72b0ee8a-cfcf-11e5-94bd-a06a76346e8f
நதிநீர் இணைப்புத் திட்டத்தால் கிடைக்கும் பலன்கள்: 
1) வெள்ள அபாயத்தை கட்டுப்படுத்தக்கூடியது.
2) 3.5 ஹெக்டேர் விவசாய பாசன நிலங்களுக்கு கூடுதலான தண்ணீரை பயன்படுத்த முடியும்.
3) 14 கோடி ஹெக்டேராக இருக்கும் சாகுபடி நிலப்பரப்பை 17.5 கோடி ஹெக்டேராக அதிகரிக்க முடியும்.
4) நாட்டில் உள்ள எந்த மாநிலமும் வறட்சியால் பாதிக்கப்படாது.
நீர்ப்பெருக்கு இல்லாத அல்லது வற்றிய ஆறுகளை உயிர்ப்பிக்க முடியும்.
5) ஆற்றங்கரையில் வசிக்கும் மீனவர்களின் பொருளாதாரம் மேம்படும்.
http://www.channel42.in/tamil/river-linking-narendra-modi-green-tribunal