கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலையடிவார பகுதியில் ஈஷா யோகா மையம் அமைந்துள்ளது. இது 150 ஏக்கர் பரப்பளவை கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈஷா மையம் 109 ஏக்கர் நிலப்பரப்பில் அரசு அங்கீகாரம் பெறாமல் கட்டிடங்களை கட்டி வருவதாக பழங்குடியினர் பாதுகாப்பு சங்க தலைவர் முத்தம்மாள் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு சம்மந்தமான நீதிமன்ற விசாரணையில், தமிழக அரசு பதிலளிக்கும் படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈஷா யோகா மையத்தில் விதிமுறைகளை மீறி கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
அரசு அங்கீகாரம் பெறவில்லை என்றும், அதிகாரிகள் அபராதம் வசூலிக்காததால் அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் கோவை மண்டல நகரமைப்பு துணை இயக்குனர் பதில் மனுவில் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் சிவன் சிலை அமைப்பு பற்றிய ஆவணத்தை தாக்கல் செய்ய கோரி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சிவன் சிலை அமைப்பதற்காக அருகில் உள்ள கிராமங்களில் 1 ஏக்கர் அளவில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே நாளை மறுநாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈஷா மையம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது.
source kaalaimalar