வெள்ளி, 3 மார்ச், 2017

நெடுவாசலில் அவ்வளவு ஆழமான குழி இருக்காதாம் ! அசத்தலான பதில் அளித்து அசத்திய தமிழிசை!

தமிழக பா.ஜ.க. தலைவா் தமிழிசை சௌந்தர்ராஜன் இன்று தஞ்சையில் பத்திரிக்கையாளா்கள் சந்தித்து பேசினார். அப்போது அவா் கூறியதாவது :
மீத்தேன் திட்டத்தைக் கொண்டு வந்தது காங்கிரஸ் அரசு, அதனை தமிழகத்தில் செயல்படுத்த  திமுக அனுமதி அளித்து கையெழுத்து இட்டது.
இப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்துப் போராடும் என்று கூறுவது  திமுகவின் சந்த்ர்ப்பவாதம்.
ஹைட்ரோ கார்பன் திட்டம் விவசாயத்துக்கும் மக்களுக்கும் ஆபத்தானது என்று கூறுகிறார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை.
மீத்தேன் திட்டத்துக்குதான்  மிக அதிக ஆழமாகக் குழி தோண்ட வேண்டும். ஆனால், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அவ்வாறு தோண்ட வேண்டிய தேவை இல்லை என்று கூறி செய்தியாளா்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஏற்கனவே சமூக வலைதளங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்பவர்கள் விஞ்ஞானிகளா என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கேட்டது, பலத்த  சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவா் இப்படி பேசி இருப்பது. அனைவரிடத்திலும் கவலையை ஏற்படுத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
source: new ge media, kaalaimalar