கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவது குறித்த வழக்கில், தேர்தல் நீதிபதிகள் வாய்மொழியாக தேர்தல் ஆணையத்துக்கு எதிராக குற்றம்சாட்டி கூறியதை வைத்து ஊடகங்கள் செய்தி வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் முன்வைத்த கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கொரோனா தொற்று அதிகரித்ததற்கு ஒரு வகையில் இந்திய தேர்தல் ஆணையம்தான் காரணம் என்று விசாரணையின்போது நீதிமன்றம் வாய்வார்த்தையாக குற்றம்சாட்டியை செய்தியாக வெளியிடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் முன்வைத்த கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது. தேர்தல் ஆணையம் சார்பாக, மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவிவேதி மீண்டும் மீண்டும் இந்த கோரிக்கையை வைத்தபோது உயர் நீதிமன்றம் அதனை நிராகரித்தது. மேலும், தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு இதற்கு நிவாரணமும் வழங்க மறுத்துவிட்டது.
கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலையை எதிர்கொள்வதில் மாநில அரசு தயார்நிலையில் இருக்கிறதா என்பதைக் கண்காணிக்க சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து பொதுநல வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அந்த வழக்கு விசாரணையின்போது ஏப்ரல் 26ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் வாய்மொழி வழியாக கருத்து தெரிவித்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம், நீதிமன்ற நடவடிக்கைகளின்போது மேற்கொள்ளப்படும் வாய்மொழி வழியான விசாரணைகளை செய்தியாக வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தின் விசாரணை உத்தரவுகளை அல்லது தீர்ப்புகளை ஊடகங்கள் செய்தியாக வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று ஊடக நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனக் கோரியது.
“கொரோனா தொற்று அதிகரித்துள்ள இன்றைய நிலைமைக்கு தேர்தல் ஆணையம்தான் பொறுப்பு. தேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிய நேரிடும்” என்று உயர் நீதிமன்றம் வாய்மொழியாக தெரித்த கருத்துகளை செய்தியாக வெளியிடுவது தேர்தல் ஆணையத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.” என்று மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவிவேதி கூறினார்.
மேலும், தேர்தல் ஆணையத்தின் மீது கிரிமினல் குற்றத்திற்காக நடவடிக்கை கோரி போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன என்று அவர் கூறினார். இந்த சர்ச்சைகளை ஏற்க மறுத்த நீதிபதிகள் அமர்வு “நீதிமன்றம் இருக்கிறது. ஏதேனும் அற்பமான புகார்கள் வந்தால் அவர்கள் நீதிமன்றத்தை அணுகலாம்.” என்று தெரிவித்தது.
மே 1, 2 தேதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்திருந்த நிலையில், மே 1ம் தேதி ஊரடங்கு அவசியமில்லை என்றும் மே 2ம் தேதி வழக்கம் போல் ஞாயிற்றுக்கிழமை பொது ஊரடங்கு அமலில் இருக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிலைமை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொரோனா தடுப்பு மருந்துகள் மற்றும் உபகரணங்கள் பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடிய அளவில் இருக்கிறதா என்று கேட்டு வருகிறது. அப்போது, 2ம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை கூட்டங்களைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கும் அமல்படுத்த முடியுமா என்றும் மே 1ம் தேதி விடுமுறை அன்று அமல்படுத்தலாம் என்று ஒரு பரிந்துரையையும் முன்வைத்தது. இது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கும் புதுச்சேரி அரசுக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் இன்று ஆஜரான வழக்கறிஞர், “மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினம் என்பதால், அன்றைய தினம் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பெரும்பான்மையான மக்கள் அன்றையதினம் வெளியே வரவாய்ப்பில்லை. அதுமட்டுமில்லாமல், மே 1ம் தேதி முதல் 18வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதால் முழு ஊரடங்கு தேவையில்லை என்று கூறினார்.
மேலும், “மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் அன்று வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் நபர்களுக்கு மட்டும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்திய வழிகாட்டுதல்களின் படி அனுமதிக்கப்படுவார்கள். மே 2ம் தேதி தேர்தல் வெற்றிகளைக் கொண்டாட யாரும் வெளியே வரக் கூடாது என்று தேர்தல் ஆணையம் விரிவான ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அது முழுமையாக பின்பற்றபடும். மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.” என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டுமா? வேண்டாமா என்பது குறித்து தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்றும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஊடகங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து தமிழக அரசு முடிவு செய்து நாளை அறிவிக்க அவகாசம் வழங்கி, வழக்கை ஒத்திவைத்தது.
மே 2 ஊரடங்கு நாளில் வேட்பாளர்கள் முகவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்றும் அதன் பின்னர் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தேவையான அளவு தடுப்பூசி வரவில்லை என்பதால், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை நாளை செயல்படுத்த முடியாது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. மேலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் கொரோனா தொற்று பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகிறது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் முக்கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்புக்கு இந்தியாவில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் முதல் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதில முதல்கட்டமாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கும், இரண்டாவது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து வரும் மே 1-ந் தேதி (நாளை) முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணிக்காக தீவிரமா தயாராகி வரும் நிலையில், நாட்டில் பல பகுதிகளில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தடுப்பூசி மையங்களுக்கு வரும் பொதுமக்கள் திரும்பி சென்று கொண்டிருக்கும் நிலையில், தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து மாநில அரசு நேரடியாக தடுப்பூசிகளை பறிமுதல் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் நாளை செயல்படுத்த முடியாது என்றும், தேவையான தடுப்பூசிகள் இன்னும் வரவல்லை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். மேலும் கர்நாடக மாநிலத்திலும், இத்திட்டத்தை நாளை செயல்படுத்த முடியாது என்று அறிவித்துள்ள நிலையில், தடுப்பூசி மையங்களில் நாளை வரிசையில் நிற்காதீர்கள் தடுப்பூசி கையிருப்பில் இல்லை என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறாக பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைச்சுவை நடிகரான விவேக், கடந்த ஏப்ரல் 17-ந் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவர் இறப்பதற்கு ஒருநாள் முன்னதாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர்அலிகான், கொரோனா தடுப்பூசியை காரணம் காட்டி காரணம் காட்டி கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.
இதனால் நடிகர் மன்சூர் அலிகான் மீது பொது அமைதியை கெடுத்தல், தொற்று நோயை பரப்பும் தீய எண்ணத்துடன் நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், தடுப்பூசி குறித்து தவறாக எதுவும் தெரிவிக்கவில்லை கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கட்டாயப்படுத்தக் கூடாது என்றுதான் கூறினேன், என குறிப்பிட்டார்.
தொடர்ந்து இந்த மனு மீதாக விசாரணையில், காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளதால் முன்ஜாமீன் வழங்கக்கூடாது என கூறியதை தொடர்ந்து மன்சூர் அலிகானின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்ட்டதை தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
இதில் அவருக்கு 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டள்ள நிலையில், அந்தத் தொகையை தடுப்பூசி வாங்க சுகாதாரத்துறைக்கு வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் சோதனை செய்த ஒவ்வொரு 100 பேரிலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 107 பேர் மரணம் அடைந்துள்ளனர். 17897 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு முதன்முறையாக மூன்று இலக்கங்களை தாண்டி இறப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த ஒருவருடத்தில் முதன்முறையாக 40 பேருக்கும் மேற்பட்டோர் ஒரே தினத்தில் மரணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் 1,12,556 நபர்களுக்கு கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 13,933 பேர் கொரோனா வைரஸுக்கு உயிரிழந்துள்ளனர். மொத்தமாக கொரோனா வைரஸால் 11,48,064 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
37 மாவட்டங்களில் 34 மாவட்டங்களில் நேற்று 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதில் 22 மாவட்டங்களில் இறப்பு பதிவாகியுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக காஞ்சியில் 11 பேர் மரணம் அடைந்துள்ளனர். மதுரையில் 8 பேர் மரணம் அடைந்துள்ளனர். மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்த நிலையிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்படவில்லை. ஆனால் மாவட்ட நிர்வாகங்களிடம் சோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். சென்னையில் சோதனை மேற்கொண்ட ஒவ்வொரு 100 பேரிலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. திருநெல்வேலியில் 17 பேருக்கும், தூத்துக்குடியில் 16 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்காசியில் நேர்மறை விகிதம் 14.2% ஆக உள்ளது. குறைந்தது 13 மாவட்டங்களில் 10%க்கும் மேல் நேர்மறை விகிதம் உள்ளது.
திருநெல்வேலியில் 6 தனியார் சோதனைக் கூட்டங்கள் உட்பட 7 சோதனைக் கூடங்களில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 2 சோதனைக் கூட்டங்களும் தென்காசியில் ஒரு சோதனைக் கூடமும் உள்ளது. மதுரை உள்ளிட்ட அருகில் இருக்கும் பெரிய மாவட்டங்களுக்கு மாதிரிகளை அனுப்பி சோதனைகளை முடிவுகளை பெற்று வருகின்றனர் இம்மாவட்டத்தில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள்.
வியாழக்கிழமை அன்று 4 இலக்கங்களில் 28 மாவட்டங்களில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவரும் நபர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. சென்னையில் தற்போது 31,308 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எழுப்பூர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் 150 ஆக்ஸிஜன் படுக்கைகள் மற்றும் 100 ஆக்ஸிஜன் அல்லாத படுக்கைகளை அளித்துள்ளது.. கோவிட் -19 நோயாளிகளுக்கு 1,200 தனிமை படுக்கைகள் கொண்ட ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, ஆறு மாடி சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிளாக்கில் கூடுதலாக 1,250 படுக்கைகள் (900 ஆக்ஸிஜன் படுக்கைகள்) சேர்க்கும் என்று டீன் டாக்டர் பாலாஜி கூறினார். மே 7 ஆம் தேதிக்குள், நகரத்தில் உள்ள அரசு கோவிட் மருத்துவமனைகளில் குறைந்தது 8,225 படுக்கைகளை அரசு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகளுக்கு தடை விதித்து, ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கல்லூரி, பல்கலைக்கழகங்களின் செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் வழியாகவே நடத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
பொறியியல் படிப்புகளுக்கான 2, 4 மற்றும் இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறுவது வழக்கம். இந்த கல்வி ஆண்டிற்கான செமஸ்டர் தேர்வுகள் குறித்தான அறிவிப்புகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதில், அனைத்து மாணவர்களும் ஆன்லைன் முறையில் தேர்வு நடைபெறும் எனவும், மேலும், மாணவர்களுக்கு புத்தகத்தை திறந்து தேர்வு எழுத அனுமதி வழங்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் உள் மதிப்பீட்டுத் தேர்வுகளில், இதற்கு முன்னர் புத்தகத்தை திறந்து தேர்வு எழுத மாணவர்களுக்கு பல முறை அனுமதி வழங்கப்பட்ட நிலையில், செமஸ்டர் தேர்வுகளில் திறந்த புத்தகத் தேர்வு நடைபெறுவது இதுவே, முதல் முறை ஆகும்.
இது குறித்து, தகவல் தெரிவித்த பல்கலைக்கழக நிர்வாகிகளில் ஒருவர், உள் மதிப்பீட்டுத் தேர்வுகளுக்கு திறந்த புத்தகத் தேர்வு முறை பயன்படுத்தப்பட்டு வந்தாலும், இறுதி செமஸ்டர் தேர்வுகளில் பயன்படுத்தப்படுவது, இதுவே முதல் முறை. கொரோனா தொற்று உச்சமடைந்ததன் காரணமாக செமஸ்டர் தேர்வுகள், திறந்த புத்தகத் தேர்வாக நடத்தப்படுவது இதுவே கடைசியாக இருக்க வேண்டும். மேலும், திறந்த புத்தகத் தேர்வு முறை இறுதியாண்டு செமஸ்டர் எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது என தெரிவித்தார்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டும் திறந்த புத்தகத் தேர்வு முறை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கும், இதே முறையில் தேர்வு நடத்த விவாதித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
பொறியியல் மாணவர்களுக்கு நடைபெற உள்ள தேர்வில், முதல் பிரிவில் மொத்தம் 10 மதிப்பெண்களுக்கு, ஒவ்வொரு அத்தியாயத்திலிருந்தும் ஐந்து இரண்டு மதிப்பெண் கேள்விகள் இருக்கும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இரண்டாவது பகுதி, 40 மதிப்பெண்களுக்கு, ஒவ்வொரு அத்தியாயத்திலிருந்தும் ஐந்து எட்டு மதிப்பெண்கள் கொண்ட கேள்விகள் இருக்கும் எனவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் வேட்பாளர்களின் பிரதிநிதியாக செயல்படுபவரே முகவர்கள். அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்களின் நம்பிக்கைக்கு உரிய, 18 வயது நிரம்பிய ஒருவரே அக்கட்சியின் முகவராக நியமிக்கப்படுவார். குறிப்பிட்ட கட்சியின் முகவர்கள் யார் என்பது, வாக்கு எண்ணிக்கைக்கு மூன்று நாள்களுக்கு முன்னதாகவே உறுதி செய்யப்படும். வாக்கு எண்ணிக்கையை கண்காணிப்பதே முகவர்களின் முதன்மையான பணி. இந்த பணியானது ஒரு நாள் பணியாகவே கருதப்படும்.
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடிதம், முகவர்களின் அடையாள அட்டையாக ஏற்றுக் கொள்ளப்படும். முகவர்களாக செயல்படுபவர்கள் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் இயந்திரம் குறித்து முழுவதுமாக தெரிந்து வைத்திருப்பர். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் என யாரும் முகவர்களாக செயல்பட இயலாது. அரசுப் பணியில் உள்ளவர்கள் வாக்கு எண்ணும் போது முகவர்களாக செயல்பட்டால், மூன்று மாதம் சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.
வாக்கு எண்ணும் போது முகவர்களின் பணி என்ன?
வாக்கு எண்ணிக்கையின் போது, வாக்குப்பதிவு எந்திரங்களை மேஜையின் மீது தேர்தல் அதிகாரிகள் வைப்பார்கள். அப்போது, எந்திரத்தின் மீது ஒட்டப்பட்ட லேபிள்கள் சரியான இருப்பதை முகவர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய பின், தேர்தல் அதிகாரிகள் எந்தெந்த வேட்பாளர்களுக்கு எவ்வளவு வாக்குகள் பதிவாகி உள்ளதென காண்பிப்பார்கள். அப்போது, அந்த எண்ணிக்கையை தவறாது முகவர்கள் குறித்துக் கொள்வார்கள்.
வாக்குப்பதிவு நிறைவடைந்த உடனேயே வாக்கு சதவீதம் கணக்கிடுவதற்காக ஒவ்வொரு பெட்டியிலும் பதிவான வாக்குகள் கணக்கிடப்பட்டு தெரிவிக்கப்படும். இந்த எண்ணிக்கையானது, ஒவ்வொரு கட்சியின் முகவர்களிடமும் இருக்கும். வாக்கு எண்ணிக்கையின் போது, வாக்குப்பதிவு இயந்திரத்தில் காண்பிக்கும் எண்ணிக்கையும், வாக்குப்பதிவு அன்று தெரிவிக்கப்பட்ட எண்ணிக்கையும் சரியாக உள்ளதான முகவர்கள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும், வேட்பாளர்கள் பெற்றதாக அறிவிக்கப்படும் வாக்கு எண்ணிக்கையிலும் குழப்பம் இல்லாமல் இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கையில் குழப்பம் இருப்பின், குறிப்பிட்ட கட்சியின், சீனியர் முகவர்களிடம் தகவல் தெரிவிக்கலாம். அதன் பின்னர், சீனியர் முகவர் மைய தேர்தல் அதிகாரியிடம் முறையிடலாம். அப்பொது, வாக்குப்பதிவு எந்திரத்தையும், விவிபேட் எந்திரத்தையும் சரிபார்ப்பார்கள். அப்போது, தேர்தல் அதிகாரியால் எண்ணிக்கையில் குளறுபடி இருப்பது நிரூபிக்கப்பட்டால், குறிப்பிட்ட எந்திரத்தின் வாக்கு எண்ணும் பணி நிறுத்தி வைக்கப்படும்.
உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து விமர்சனம் செய்தற்காக நடிகர் சித்தார்த்க்கு மிரட்டல் அழைப்புகள் வந்து கொண்டிருக்கிறது.
இது குறித்து, நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலை பதிவிட்டுள்ளார். அதில் நேற்று முதல் சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு பதிவில் என்னுடைய தொலைப்பேசி எண்ணை தமிழக பாஜகவினர் வெளியிட்டு என்னை திட்டவும் துன்புறுத்தவும் சொல்லியுள்ளனர். இவன் இனிமேலே வாயே தொறக்க கூடாது என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அதற்கு, கொரோனாவையே தாங்கி விட்டோம் இதை தாங்க மாட்டோமா என்று சித்தார்த் பதிலடி கொடுப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இன்னொரு பதிவில் என்னுடைய தொலைபேசி எண்ணை தமிழக பாஜகவினர் நேற்று வெளியிட்டுள்ளனர். எனக்கு இதுவரை 24 மணி நேரத்தில் 500 மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளது. எனக்கும் என் குடும்பத்தினருக்கும் கற்பழிப்பு மற்றும் கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. அனைத்து அழைப்புகளையும் பதிவு செய்து காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நான் பேசாமல் இருக்க மாட்டேன். நீங்கள் முயற்சி செய்து கொண்டே இருங்கள். என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக ஏப்ரல் 27ஆம் தேதி அன்று ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை என முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதைக் கண்டித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமான விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.
’மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாக தவறாக கூறுகின்றன அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என யோகி ஆதித்யநாத் கூறிய செய்தி ஒன்றினை மேற்கோளிட்டு, “சாதாரண மனிதாராக இருந்தாலும் சரி, புனிதராக இருந்தாலும் சரி, எந்த தலைவராக இருந்தாலும் சரி பொய் சொன்னால் அறை விழும்” என்று நடிகர் சித்தார்த் பதிவிட்டிருந்தார்.
மேலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனை ட்விட்டரில் டேக் செய்து நீங்கள் கொரோனா போராளி அல்ல ‘கொரோனாவின் கூட்டாளி’ என்றும் சித்தார்த் விமர்சித்திருந்தார்.
நடிகர் சித்தார்த்தின் இந்த கருத்துகளுக்கு இணையத்தில் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் விமர்சனங்கள் குவிந்து வந்த நிலையில், தற்போது சித்தார்த் தொலைப்பேசி எண்ணிற்கு மிரட்டல் அழைப்புகள் வந்துக் கொண்டிருக்கிறது.
தப்லீக் ஜமாஅத் தொடர்பான காவல்துறை எச்சரிக்கை - தவ்ஹீது ஜமாஅத் கடும் கண்டனம்.
சென்னை, கிருஷ்ணகிரி, தென்காசி மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பணிகளில் தப்லீக் ஜமாஅத்தின் நிர்வாகிகள் நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. ஆகவே மதத்தலைவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காவல்துறை எச்சரிக்கின்றது”!
இது காவல் துறை வெளியிட்ட எச்சரிக்கையாகும். இந்த எச்சரிக்கை முஸ்லிம்களிடம் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவதாகவே உள்ளது. காவல் துறையின இச் செயல் கடுமையான கண்டனத்துக்குரியதாகும்.
இது கொரோனாவுக்கு எதிரான காவல்துறையின் விழிப்புணர்வு நடவடிக்கைத் தான் என்று இதை எளிதில் கடந்து விடமுடியாது.
ஏற்கனவே கொரோனா பரவலுக்கு தப்லீக் ஜமாஅத் தான் காரணம் என்பதை காவல்துறை மறு பதிவு செய்வதாகவே இதை காண முடிகின்றது.
இது மீண்டும் முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வுக்கு வித்திடுவதாகவே அமைகின்றது.
"ஏனிந்த இரட்டைப்பார்வை?
உத்தரகாண்ட் ஹரித்வாரில் நடந்த கும்பமேளாவில் நாடெங்கிலும் பக்தர்கள் 13 இலட்சத்திற்கு மேல் போய் கலந்துக் கொண்டிருக்கும் போது தமிழகம் அதற்கு விதிவிலக்கு கிடையாது.
தமிழகத்தில் கலந்துக் கொண்ட பக்தர்கள் யார்? யார்? எத்தனை பேர் கலந்துக் கொண்டு திரும்பி இருக்கின்றார்கள்? இது தொடர்பாக காவல்துறை வாய் திறக்கவில்லை.
உண்மையில் இப்போது உடனே கண்டறியப்பட வேண்டியவர்கள் கும்ப மேளாவில் கலந்துக் கொண்டவர்கள் தான்.
அவர்களின் நடமாட்டம் தான் கண்காணிக்கப்படவேண்டும். காரணம் அவர்களில் பலருக்கு கொரோனா பாஸிடிவ் என்று ரிப்போர்ட் வந்திருக்கின்றது.
அதிலும் குறிப்பாக அதில் பங்கெடுத்த சுகாதார அதிகாரிகளுக்கும் கொரோனா பாஸிட்டிவ் என்று ரிப்போர்ட் உறுதியாகி இருக்கின்றது.
இந்த வகையில் அவர்கள் தான் நடமாடும் வைரஸ் வெடிக்குண்டுகள்! அவர்கள் எங்கு வெடிப்பார்கள்? எப்படி வெடிப்பார்கள்? என்று யாருக்கும் தெரியாது.
தமிழக காவல்துறை உடனடியாக கவனத்தை திருப்ப வேண்டிய கூட்டம் கும்பமேளாக் கூட்டம் தான்.
ஆனால் அதன் பக்கம் கவனம் செலுத்தாமல் தப்லீக் ஜமாஅத்தின் பக்கம் கவனத்தை செலுத்தியிருப்பதில் ஏதோ உள் நோக்கம் இருப்பதாகவே தெரிகின்றது.
தமிழக காவல்துறை ஏன் இந்த இரட்டைப் பார்வை பார்க்கின்றது என்று முஸ்லிம்களுக்கு மத்தியில் கேள்வி எழுகின்றது.
வடமாநிலங்களில் முஸ்லிம்கள் வணக்கத்தலங்களான பள்ளிவாசல்களை கொரோனா நோயாளிகளின் சிகிச்சை முகாம்களாக மாற்றி, மனித நேயத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் தமிழக காவல் துறையின் இஸ்லாமிய சமுதாயத்தின் மீது செலுத்துகின்ற பார்வை ”ஒரு மத” வெறுப்புப் பார்வையாக அமைந்திருக்கின்றது.
ஊமையாகி,ஊனமாகி ஒடுங்கிய ஊடகங்கள்!
கொரோனா முதல் அலையின் போது ஊடகங்களும் சங்கப்பரிவாரங்களும் தப்லீக் தான் வைரஸ் பரவலுக்கும், பாய்ச்சலுக்கும் காரணம் என்று ஒருமித்து ஒரே குரலில் சங்கூதின. அதிலும் ரிபப்ளிக் டிவீயின் அதிமேதாவி அர்னாப் கோசாமி கொடுத்த காசுக்கும் கூடுதலாகவே கூவினான்.
ஆனால் கும்பமேளாக் கூட்டத்தைப் பற்றி இப்போது அவனும் ஏனைய ஊடகங்களும் வாய்திறக்கவே இல்லை! ஊடகங்களின் சப்த நாடிகள் ஒட்டுமொத்தமாகவே அடங்கி விட்டன!
சங்கிகளுக்கு ஒரு பார்வை!முஸ்லிம்களின் மீது வேறுபார்வை. ஊடகங்களுக்கு ஏனிந்த இரட்டைப் பார்வை?
தப்லீக் ஜமாஅத்தினர் மீது மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பல்வேறு குற்றப்பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட 3 முதல் தகவல் அறிக்கையை அம்மாநில உயர் நீதிமனறம் ரத்து செய்ததுடன் சிறையில் அடைக்கப்பட்ட அப்பாவி 39 தப்லீக் ஜமாஅத்தினரை விடுதலையும் செய்தது. இவர்களில் 29 பேர் வெளிநாட்டைச் சார்ந்தவர்கள். மற்றவர்கள் உள்நாட்டைச் சார்ந்தவர்கள்.
”அரசாங்கத்தை ஆளுகின்ற அரசியல் கட்சி இது போன்று பேரிடர், பேரழிவு நோய் ஏற்படும் சூழ்நிலையில் யாரையாவது பலிக்கடாவாக்கும் வாய்ப்பைத் தேடுகின்றது. இம்மாதிரியான சூழ்நிலைகளில் இது போன்ற வெளிநாட்டினர்கள் பலிகடாவாக மாட்டிக் கொள்கின்றனர்” என்று இது தொடர்பான தீர்ப்பின் போது மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்ட வார்த்தைகள் மிகவும் இங்கு கவனித்தக்கவையாகும்.
இது போன்று மும்பை உயர் நீதிமனற வழியில் சென்னை உயர்நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றம் தப்லீக் ஜமாஅத்தினர் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்தன. கைது செய்யப்பட்ட தப்லீக் ஜமாஅத்தினரை விடுதலையும் செய்தன.
வைரஸ் பரவலுக்கு தப்லீக் ஜமாஅத் ஒரு தம்புடி அளவுக்கு கூட காரணமில்லை என்பதை இந்த 3 உயர் நீதிமன்றங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றன.
இத்தனைக்கு பிறகும் தமிழக காவல்துறை தப்லீக் ஜமாஅத்தின் மீது ஒருதலைபட்சமான பார்வையை பதிவு செய்திருப்பது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும்.
இதில் வேடிக்கை என்னவெனில் கும்பமேளாவிலிருந்து திரும்பியவர்களில் தப்லீக் ஜமாஅத்தின் நிர்வாகிகளும் திரும்பியிருக்கக் கூடும் என்ற சந்தேகம் இருப்பதால் மதத்தலைவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காவல் துறை கூறியிருப்பது தான்.
இது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதாகும். . இது தப்லீக் ஜமாஅத்தின் மீதான பார்வை முற்றிலும் தவறான பார்வை என்பதையே வலுப்படுத்துகின்றது.
அமைதிப்பூங்காவாக திகழும் தமிழகத்தில் காவல்துறையின் இது போன்ற பார்வை இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் மீது ஒரு விதமான வெறுப்புணர்வையே பிற சமுதாய மக்களிடம் விதைக்க வழி வகுக்கும்!
சென்ற தொற்றின் போது முஸ்லிம்கள் பலிகடாவாக ஆக்கப்பட்டு அதன் வலியிலிருந்து சமுதாயம் இப்போது தான் மீண்டு வந்திருக்கின்றது. திரும்பவும் அதே வேதனையை முஸ்லிம்கள் மீது காவல் துறை திருப்பி விடுவதாக இந்த எச்சரிக்கை அமைந்திருக்கின்றது என்பதை தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் வேதனையுடன் பதிவு செய்துக் கொள்கின்றது. அதை வன்மையாகக் கண்டிக்கின்றது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த 6 -ம் தேதி நடந்து முடிந்த நிலையில், கொரோனா பரவல் தமிழகத்தில் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. நாள் ஒன்றுக்கு தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 15000 -ஐ கடந்துள்ளது. இந்நிலையில், தேர்தல் வாக்குப்பதிவானது வரும் மே 2 -ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு தேவையான பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி, அதிமுக வேட்பாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கானது, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையில், தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வாக்கு எண்ணிக்கைக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருப்பதாகவும், வாக்குப்பதிவு நாளன்று கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவலுக்குத் தேர்தல் ஆணையம் தான் காரணம் என கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தனர். தேர்தலின் போது, கொரோனா கட்டுப்பாடுகள் காற்றில் பறந்ததை நீதிமன்றம் எவ்வளவு அறிவுறுத்தியும் தேர்தல் ஆணையம் காதில் வாங்கவில்லை. அரசியல் கட்சிகள் கொரோனா பரவலை மறந்து, இஷ்டம் போல பிரசாரங்களில் ஈடுபட்ட போது வேற்று கிரகத்தில் இருந்தீர்களா? தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக் குற்றமே சுமத்தலாம் என காட்டமாக தெரிவித்திருந்தனர். இதற்கு முன்னதாக, தமிழக தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ம் தேதி, ஞாயிறு ஊரடங்கை தளர்த்துவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நாளன்று தேவையான அனைத்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்க வேண்டும். கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாவிட்டால், வாக்கு எண்ணிக்கை ரத்து செய்யப்படும்,’ என எச்சரித்தனர். அதோடு, வருகிற சனி, ஞாயிறுகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தவும் தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் பரிந்துரை செய்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட தடை விதிப்பதாக அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. வாக்கு எண்ணிக்கையின் போதும் அதற்குப் பின்னரும் அனைத்து விதமான வெற்றிக் கொண்டாட்டங்களையும் இந்திய தேர்தல் ஆணையம் தடை செய்வதாக தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, தேர்தல் பிரசாரங்களின் போது காற்றில் பறந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், வாக்கு எண்ணும் போது மட்டும் கடைப்பிடிக்கப்படுமா? தும்பை விட்டு வாலை பிடித்துள்ளது தேர்தல் ஆணையம் என அரசியல் விமர்சகர்கள், மூத்த பத்திரிகையாளர்கள், பொது மக்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு குறித்து, சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தைச் சார்ந்த செந்தில் ஆறுமுகத்தை தொடர்பு கொண்டோம். ‘தேர்தல் பிரசாரங்களின் போது கொரோனா விதிமுறைகள் மீறப்பட்டதை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் அதிவேக பரவலுக்கு தேர்தல் ஆணையமும் முக்கிய காரணம் ஆகிருச்சி என்பது தான், நீதிமன்றத்தின் கருத்தா இருக்கு. அரசியல் சாசனத்தில் உயிர் வாழும் உரிமை தான் முதன்மையானது. அதற்கு பின்பு தான், தேர்தல், ஜனநாயகம் எல்லாமே.
தலைவரோட வெற்றியை கொண்டாடுறவங்களுக்கு ஒரு வேல தொற்று ஏற்பட்டுச்சினா, வீட்ல இருக்கவங்களுக்கும் கொரோனாவ கொண்டு போய் சேர்ப்பாரு. இது உயிர்கள் சம்பந்தப்பட்ட விசயம். இபப்டி இருக்க, இந்திய தேர்தல் ஆணையம் வெற்றிக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது தான். இதை நீதிமன்றம் சொல்லித் தான் பின்பற்றனும்ங்குற அவசியல் இல்ல. ஒவ்வொரு அரசியல் கட்சியும் சமூக பொறுப்போடு தேர்தல் பிரசாரம் ஆரம்பிச்சதுல இருந்து தானாகவே பின்பற்றியிருக்கனும். எந்த ஒரு அரசியல் கட்சியும் அத பின்பற்றல.
கொரோனா கட்டுப்பாடுகளோட செயல்பட்டாலும், ஒரு வாக்கு எண்ணிக்கை மைய அறையில, கொறஞ்சது 150 ல இருந்து 200 பேர் வரை இருக்குறதுக்கான சூழல் இருக்கு. வாக்கு எண்ணும் போது, வாக்கு எந்திரங்களைச் சுற்றி கூட்டம் கூடும். அப்போ, சமூக இடைவெளிக்கு வாய்ப்பு அறவே இல்ல. இந்த நிலையில, வாக்கு எண்ணிக்கைல கலந்துக்குற வேட்பாளர்கள், முகவரக்ளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டிருக்கு. 72 மணி நேரத்துக்கு முன்னாடி டெஸ்ட் எடுத்துக்கனும். ஆனா, தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் இந்த இடத்த கவனிக்க மறந்துட்டாங்க. டெஸ்ட் எடுத்து பிறகு, அவங்கள தனிமைப்படுத்திப்பாங்களா என்பது கேள்விக் குறி தான். டெஸ்ட் எடுத்த பின்பு அவங்களுக்கு கொரோனா பரவாது என்பதற்கு என்ன சான்று இருக்கு,’ என கேள்வி எழுப்பி உள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், விதிமுறைகள் பின்பற்றபடாவிட்டால் வாக்கு எண்ணிக்கையை ரத்து செஞ்சிருவோம்னு அறிவிச்சிருக்கு. முறையான அறிவிப்புகள வெளியிட காபந்து அரசால முடியாது. அதிகாரம் கொண்ட தமிழக அரசு வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர் தான் இக்கட்டான சூழலை முறையாக கையாள வழிவகுக்கும்,’ என்றார்.
இது குறித்து, மூத்த பத்திரிகையாளரான எஸ்.பி.லட்சுமணனிடம் பேசினோம். ‘எந்த ஒரு அரசியல் கட்சியும் சமூக பொறுப்புணர்வுடன் செயல்படல. ஒவ்வொரு கட்சியை சார்ந்த தலைவர்களும் நின்று பரப்புரை செஞ்ச இடங்கள்ல குறைந்தது பத்தாயிரம் மக்களாவது கூடி இருப்பாங்க. தேர்தல் ஆணையம் இத அமைதியா வேடிக்கை பாத்துச்சு. அரசியல் விமர்சகர்கள் பலரும், இதோட விளைவு தேர்தல் முடிஞ்சித் தான் தெரியும்னு சொன்னாங்க. தேர்தல் வாக்குப்பதிவு முடிஞ்சி, அடுத்த 10 நாள்களுக்குள் பல்லாயிரக்கணக்கானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுட்டு வருது.
தேர்தல் கூட்டங்களுக்கு வந்தவங்களுக்கு தான் கொரோனா வந்துச்சினு சொல்லிற முடியாது. ஆனா, தொற்று எண்ணிக்கை கூடுவதை பார்த்தால் தேர்தல் கூட்டங்களும் பிரதான காரணமாக இருக்கலாம். தேர்தல் முடிஞ்ச நிலையில், எல்லா கட்சியை சேர்ந்த வேட்பாளர்களிலும் குறைந்தது 25 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனைகள்ல சிகிச்சை எடுத்துருக்காங்க. இது மூலமாகவே, தேர்தல் பரப்புரைகளால பாதிப்பு இருப்பது வெளிச்சத்துக்கு வந்துருச்சி.
வாக்கு எண்ணிக்கை அன்னைக்கு யார் ஆட்சியை பிடிப்பாங்கனு ஒரு எதிர்பார்ப்பு எல்லாருகிட்டையும் இருக்கும். கூட்டம் கூடும். வாக்கு எண்ணிக்கை அறையில பல கட்டுப்பாடுகள கொண்டு வரலாம். ஆனா, வாக்கு எண்னும் மையங்களின் முன்னாடி பல நூறு பேர் கூடலாம். நீதிமன்றம் இந்த சமயத்துல தாமதமாக இருந்தாலும், சரியான முடிவ எடுத்துருக்காங்க.
வரப்போற ஆட்சியாளர்களுக்கு பயந்து காவல்துறை கண்டு கொள்ளாமல் இருக்கக் கூடாது. இந்த நிலைமையை சரி செய்ய காவல்துறையே முதன்மையான ஆதாரம். காவல்துறை முறையாக கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
அரசியல் கட்சிகளின் முன்னனி தலைவர்கள் வெற்றிப் பெற்றால், வெற்றிப் பெற்றதற்கான சான்றிதழை வாங்குவதற்கு வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரணும். அப்போ, அயிரக்கணக்குல கூட்டம் கூட வாய்ப்பிருக்கு. இந்த சூழல்ல வெற்றிய கொண்டாடாம நிலைமையை கருத்தில் கொண்டு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கட்சித் தொண்டர்களை கட்டுப்படுத்தும் விதமாக அறிக்கைய வெளியிடனும். கட்டுப்பாடுகள் மீறும் பட்சத்துல நான் அந்த இடத்துக்கு வர மாட்டேன்னு அவங்க, தொண்டர்களுக்கு எச்சரிக்கணும். இத செய்யாம, கட்டுபடுத்த முடியல, தொண்டர்கள் ஆர்வத்துல வந்துட்டாங்கனு சொல்றதுல அர்த்தம் இல்ல. இத செய்ய தவறினால், மக்களுக்கு அறிவுரை செல்லுற தகுதியை அந்த தலைவர்கள் இழப்பார்கள்’, என்றார்.
இந்த நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி திட்டமிட்டப்படி, மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என இன்று அறிவித்துள்ளார். இதன் பொருள் நீதிமன்ற அறிவுரையைப் பின்பற்றி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என நம்பலாம்.
கொரோனா தொற்றுப் பரவல் இந்தியாவில் உச்சமடைந்துள்ள நிலையில், பெரும்பாண்மையான மாநிலங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். மாநில அரசுகளின் குற்றச்சாட்டை அடுத்து, மத்திய அரசு நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஒரு கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்துகளை மாநிலங்களின் முன்களப் பணியாளர்களுக்கு செலுத்த அளித்திருப்பதாகவும், அடுத்த மூன்று தினங்களில் சுமார் 86 லட்சம் தடுப்பூசி மருந்துகள் விநியோகிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின் படி, அனைத்து மாநிலங்களிலும் இன்னும் 1,00,47,157 டோஸ் தடுப்பூசி மருந்துகள் இருப்பில் உள்ளன. அதிகபட்சமாக, உத்தரபிரதேசத்தில் 10.10 லட்சம் டோஸ்களும், மகாராஷ்டிராவில் 9.23 லட்சம் டோஸ்களும், பீகாரில் 7.50 லட்சம் டோஸ்களும், குஜராத்தில் 6.09 லட்சம் டோஸ்கள்ம், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 5.95 லட்சம் டோஸ்களும் இருப்பில் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநிலங்களில் இருப்பில் உள்ள டோஸ்களை முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. மேலும், அடுத்த மூன்று நாட்களில் 86,40,000 டோஸ் தடுப்பூசி மருந்துகள் மாநிலங்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
சமீபத்தில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த சில அரசாங்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி, மாநிலத்தில் தடுப்பூசிகள் முடிந்துவிட்டதாக சில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. தடுப்பூசி பற்றாக்குறையால் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் இயக்கத்தை மோசமாக பாதிப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததாக செய்தியில் குறிப்பிட்டுள்ளதை மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, மகாராஷ்டிரா இதுவரை பெற்றுள்ள மொத்த கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கையானது, 1,58,62,470 என்றும், இதில், 0.22% வீணாக்கப்பட்டது போக, 1,49,39,410 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், மாநிலத்தில், 9,23,060 டோஸ் தடுப்பூசிகள் மருந்துகள் இருப்பில் உள்ளதாகவும், அவை, முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அளிக்கப்பட இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், அடுத்த மூன்று நாட்களில் மகாராட்டிராவுக்கு 3,00,000 டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்துகள் வழங்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாகவும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மகாராஷ்டிராவை தொடர்ந்து, அடுத்த மூன்று நாட்களில் உத்தரப்பிரதேசத்திற்கு 11 லட்சம் டோஸ்களும், பீகார் மாநிலத்துக்கு 7 லட்சம் டோஸ்களும், அசாமிற்கு 6.5 லட்சம் டோஸ்களும், குஜராத்துக்கு 5 லட்சம் டோஸ்களும் மற்றும் மத்திய பிரதேசத்துக்கு 4.8 லட்சம் டோஸ் மருந்துகளும் வழங்கப்பட உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த மாநிலங்களைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களுக்கும் தலா 3 லட்சம் வீதம் தடுப்பூசி மருந்து அளிக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை அன்று புதிதாக 15,830 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது, தமிழகத்தில் மொத்தம் 1,08,855 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 77 பேர் கொரோனாவால் உயிரிழந்ததை அடுத்து மாநிலத்தில் ஒட்டுமொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 14,043 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11.13 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
கடந்த 10 நாட்களில் மட்டும் மாநிலத்தில் 1.26 லட்சம் பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், மாநிலத்தின் புதிய நெறிமுறைகள் இப்போது 10 நாட்களுக்கு முன்பே நோயாளிகளை வீட்டிற்கு அனுப்ப மருத்துவமனைகளை அனுமதித்துள்ளன. புதிய நெறிமுறையின்படி இப்போது தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு அறிகுறிகள் இல்லாவிட்டால் அவர்களை வீட்டிற்கு அனுப்பலாம். மேலும் அறிகுறிகள் இருப்பவர்களை 10 நாட்களுக்குப் பிறகு வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கலாம். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று 14,043 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
ஏற்கனவே, பரிசோதனை செய்த 10 நாட்களுக்குப் பிறகு தொற்று பாதித்து சிகிச்சையில் இருப்பவர்களை வீட்டிற்கு செல்ல அனுமதிக்கலாம் என்று நாங்கள் கூறியிருந்தோம். ஆனால் பெரும்பாலானோர் அறிகுறிகள் வெளிப்பட்ட மூன்றாவது அல்லது நான்காவது நாளில் மட்டுமே சோதனைக்குச் செல்கிறார்கள் இதனால் பரிசோதனை முடிவுகள் வரும் நேரத்தில் பலர் ஆரோக்கியமாக இருக்கிறார்கள், என்று கோவிட் கட்டுப்பாட்டு மையத்தைச் சேர்ந்த ஒரு மூத்த அதிகாரி கூறினார். கூடுதலாக, பல மருத்துவமனைகள் இப்போது ஆக்ஸிஜன் தேவையில்லாத நோயாளிகளை வெளியேற்றுகின்றன அல்லது தீவிர கண்காணிப்பு தேவைப்படாத வேறு எந்த பாதிப்புகளையும் கொண்டிருக்காத நோயாளிகளை வெளியேற்றுகின்றன. இந்த நோயாளிகளில் பலர் வீட்டு தனிமைக்கு அனுப்பப்பட்டாலும், அவர்களின் பெயர்கள் கவனக்குறைவாக வெளியேற்றப்பட்ட பட்டியலில் சேர்க்கப்படுகின்றன.
மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டமான சென்னையில் செவ்வாய்க்கிழமை மட்டும் புதிதாக 4,640 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 27 பேர் இறப்புகளும் பதிவாகியுள்ளன. சென்னைக்கு அருகிலுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,181 புதிய பாதிப்புகளும், திருவள்ளூரில் 717 புதிய பாதிப்புகளும், காஞ்சிபுரத்தில் 301 புதிய பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது. இந்த 4 மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் 6,839 புதிய பாதிப்புகளும் 48 இறப்புகளும் பதிவாகியுள்ளன. மேலும் சென்னை மண்டலத்தில் தற்போது 47,961 பேர் சிகிச்சையில் உள்ளனர். வடக்கில் உள்ள மற்ற மாவட்டங்களில் மொத்தமாக 1,617 புதிய பாதிப்புகளும் ஆறு இறப்புகளும் பதிவாகியுள்ளன.
996 புதிய தொற்றுகளுடன், கோயம்புத்தூர் மாநிலத்தில் மூன்றாவது இடத்திலும், மேற்குப் பகுதியில் உள்ள மாவட்டங்களில் முதலிடத்திலும் உள்ளது. மேற்கில் உள்ள எட்டு மாவட்டங்களில் மொத்தமாக 3,298 புதிய தொற்று பாதிப்புகளும் ஒன்பது இறப்புகளும் பதிவாகியுள்ளன.
தெற்கு பகுதியிலுள்ள 10 மாவட்டங்களில் 2,695 புதிய தொற்று பாதிப்புகளும். ஒன்பது இறப்புகளும் பதிவாகியுள்ளன. தெற்கில் உள்ள மாவட்டங்களில், திருநெல்வேலி 680 புதிய தொற்றுகளுடன் தெற்கு மாவட்டங்களில் முதலிடத்தில் உள்ளது. மத்திய மண்டலத்தில், 1,379 புதிய தொற்று பாதிப்புகளும் ஐந்து இறப்புகளும் பதிவாகி உள்ளன. 468 புதிய தொற்று பாதிப்புகளுடன் மத்திய மண்டலத்தில் திருச்சி முதலிடத்தில் உள்ளது. செவ்வாய்க்கிழமை, குறைந்தது 22 மாவட்டங்களில் கொரோனாவால் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. சென்னைக்குப் பிறகு, செங்கல்பட்டு (8) அதிக எண்ணிக்கையிலான இறப்புகளைப் பதிவுசெய்துள்ளது. காஞ்சிபுரத்தில் ஏழு பேரும், திருவள்ளூரில் ஆறு பேரும் சேலத்தில் ஐந்து பேரும் கொரோனாவால் இறந்துள்ளனர். .
மறுபுறம் தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை அன்று 1.3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
: நம் கைக்கு எட்டிய தொலைவில் கிடைக்கும் முக்கிய மூலிகைகளுள் ஒன்று அருகம்புல். வயல் வெளிகளிலும், தரிசு நிலங்களிலும் செழித்து காணப்படும் அருகம்புல்லில் ஏராளமான பச்சைய நிறமி காணப்படுவதால், இயற்கை மருத்துவத்தில் முதலிடம் பிடித்துள்ளது.
காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாற்றினைக் குடித்து வர பலவேறு பயன்களை நாம் பெறலாம். ஆனால், அருகம்புல் ஜூஸ் குடித்த அடுத்த 2 மணி நேரத்திற்குப் பிறகே மற்ற உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அருகம்புல் சாறை தினமும் குடித்து வந்தால், இரத்தத்தைப் பெருக்கி, ரத்தச்சோகை ஏற்படாமல் பாதுகாக்கிறது. ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுவதோடு, உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.
இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகங்களின் சீரான இயக்கத்திற்கும் அருகம்புல் உதவி செய்கிறது. கல்லீரலில் கற்கள் உண்டாவதைத் தடுப்பதுடன், ரத்த அழுத்தத்தையும் ஒழுங்குப்படுத்துகிறது.
காரத்தன்மை கொண்ட அருகம்புல்லில் ஏராளமான உயிர்ச்சத்துகளும், தாது உப்புகளும் செறிந்து காணப்படுகிறது. இவற்றின் உதவியோடு, உடலில் சேரும் நச்சுப் பொருள்களை நீக்கும் வல்லமை கொண்டது அருகம்புல் என்றால், அது மிகையாகாது.
தசை தளர்ச்சியை போக்கி, உடலுக்கு வலுவை தரக்கூடிய தன்மைக் கொண்டது. காரத்தன்மை உடைய மூலிகையாக இருந்தாலும், இரத்தத்தில் உள்ள அமிலத் தன்மையை சமப்படுத்தி, அல்சர் எனும் குடற்புண்ணைக் குணப்படுத்த உதவுகிறது.
அருகம்புல்லில் உள்ள சத்துகள், எல்லாவிதமான நச்சுக்கிருமிகளையும் நீக்கும் ஆற்றல் கொண்டது. ரத்த நாள அடைப்பு உள்ளவர்கள் அருகம்புல்லை அரைத்துப் பாலில் கலந்து சாப்பிட்டால் நோய் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம்.
பல் ஈறுகளில் ரத்தம் கசிவதைத் தடுத்து, பற்களை உறுதிப்படுத்துகிறது. பற்களில் படிந்துள்ள கறைகளைப் போக்கி வெண்மையாக்குகிறது. மேலும், வாய் துர்நாற்றத்தையும் போக்குகிறது.
நச்சுப் பொருள்களால் உண்டாகும் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது அருகம்புல். இதில் ‘இன்சுலின்’ நிறைந்துள்ளதால், நீரிழிவு நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது. மேலும், ஆஸ்துமாவுக்கு மருந்தாக அமைகிறது.
அதிகப்படியான உடல் வெப்பத்தைத் தணித்து, உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மலச்சிக்கலை போக்குகிறது. தோல் நோய்க்கும், சேற்றுப் புண்ணுக்கும் மருந்தாக அருகம்புல் விளங்குக்கிறது. அரும்புல்லுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, உடலில் பூசி குளித்தால் வேர்க்குரு, சொறி, சிரங்கு, ஆகியவை நீங்கும்.
அருகம்புல்லில் உள்ள சத்துகள், எல்லாவிதமான நச்சுக்கிருமிகளையும் நீக்கும் ஆற்றல் கொண்டது. ரத்த நாள அடைப்பு உள்ளவர்கள் அருகம்புல்லை அரைத்துப் பாலில் கலந்து சாப்பிட்டால் நோய் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம்
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போதும் அதற்குப் பின்னரும் அனைத்து வெற்றி ஊர்வலங்களையும் தேர்தல் ஆணையம் தடை செய்வதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
கடந்த மாதம் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கொரோனா நெறிமுறைகளை மீறுவதில் இருந்து அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்திருந்தது. இதற்கு ஒரு நாள் கழித்து தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழைப் பெறுவதற்கு வெற்றி பெற்ற வேட்பாளருடன் செல்ல அனுமதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 2 பேர் என தேர்தல் ஆணையம் வரையறை செய்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்து, “இன்று நாம் இருக்கும் இந்த நிலைமைக்கு தேர்தல் ஆணையம்தான் பொறுப்பு” என்று கூறியது.
நான்கு நாட்கள் கடுமையான விசாரணைக்குப் பிறகு, கொல்கத்தா உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை கடுமையாக கண்டித்தது. கொரொனா வைரஸ் இரண்டாவது அலை அதிகரித்து வரும் நிலையில், அரசியல் கட்சிகள் உரிய கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றுகின்றன என்பதை உறுதிப்படுத்த போதுமான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்று கடுமையாக விமர்சித்தது.
தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சரும் கரூர் தொகுதி அதிமுக வேட்பாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அந்த மனுவில் கரூர் தொகுதியில் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டியிட்டுள்ளனர். மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது கடுமையான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி இருந்தார்.
கோவிட் நெறிமுறைகளை எவ்வாறு கடைபிடிக்க்கப்பட வேண்டும் என்பது குறித்து மே 2ம் தேதிக்கு முன்னர் ஒரு வரைபடத்தைத் தயாரிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தியது. மேலும், “இந்த மாநிலம் உங்கள் தனி அதிகாரத்துக்கு மேலும் அடிபணியாது. தேர்தல் அணையம் சரியான நடவடிக்கைகளை எடுக்க தவறினால், வாக்கு எண்ணிக்கையை நிறுத்த உத்தரவிட நேரிடும்” என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்தது.
தமிழக சட்டமன்றத் தேர்தலை ரத்து செய்யக் கோரி, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார். சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு முழுவதும் கொரோனா மக்களை வாட்டி வதைக்கக்கூடிய நேரத்தில் ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய வகையில் முகக் கவசத்தை கண்டிப்பாக அணிய வேண்டும் என்றார்.
தமிழக மக்களுடைய நலன் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய மக்களுடைய நலன் கருதி தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்தியபிரதா சாகு அவர்களை நான் அவருடைய அலுவலகத்தில் சந்தித்தேன். என்னுடன் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்கள் சக்திவேல் உள்ளிட்ட நண்பர்களும் கலந்து கொண்டார்கள்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. தேர்தல்களை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உலகத்தில் எல்லா நாடுகளிலும் எல்லா மக்களுக்கும் வாக்குரிமை கிடையாது. ஜனநாயக நாடுகளில் தான் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் வாக்குரிமை இருக்கின்றது.
அந்த வாக்குரிமை மூலமாக மக்கள் பிரதிநிதிகள் சட்டமன்றத்திற்கும், நாடாளு மன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அந்த பிரதிநிதிகள் தான் மக்களை ஆட்சி செய்வார்கள். அவர்கள் மூலமாகத்தான் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகள் கிடைக்கின்றன. எனவே அந்த வகையில் வாக்குரிமை என்பது குடிமக்களுக்கு, 5 ஆண்டு காலத்துக்கு ஒரு முறை தங்களுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான ஒரு மிகப்பெரிய வாய்ப்பு ஆகும். எனவே அந்த வாக்குரிமை என்பது ரகசியமாக நடைபெற வேண்டும். எந்த விதமான ஆசை வார்த்தைகளுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆட்படாமல் இருந்திட வேண்டும் என்று தான் ரகசிய வாக்கெடுப்புகள் நடைபெறுகின்றன.
தமிழ்நாட்டில் இதுநாள் வரையிலும் தேர்தல்களில் இலை மறை காயாக வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் அல்லது பணம் வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த காலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பெரிய அளவு பணப்பட்டுவாடா நடந்தது.
ஆனால் 234 தொகுதிகளிலும் இந்த முறை எந்தவிதமான கூச்சமோ, அச்சமோ இல்லாமல் ஒவ்வொரு வாக்குச் சாவடிகளுக்கும் முன்பாக கவுண்டர்கள் அமைத்து பட்டவர்த்தனமாக, 500 ரூபாய் முதல் 5000ரூபாய் வரையிலும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டு, வாக்குகள் ஒவ்வொன்றும் விலைக்கு வாங்கப்பட்டு இருக்கின்றன. இது ஒரு ஜனநாயகத்துக்கு ஒரு மிகப்பெரிய ஆபத்தான போக்காகும்.
எனவே, இப்பொழுது நடைபெற்றிருக்கக் கூடிய சட்டமன்றத் தேர்தல் என்பது ஜனநாயகபூர்வமாகவோ சுதந்திரமாகவோ நடைபெற்ற தேர்தல் அல்ல. இது ஊழல் படுத்தப்பட்டு நடைபெற்ற தேர்தல் ஆகும். எனவே இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது. தேர்தல் ஆணையத்திற்கு இது போன்று நடக்கக்கூடிய ஊழல்களை கட்டுப்படுத்துவதற்கு உண்டான எல்லா விதமான அதிகாரகங்களும் இருக்கிறது. எனவே வரக்கூடிய மே மாதம் 2ஆம் தேதி நடைபெறக்கூடிய வாக்கு எண்ணிக்கையை நடைபெறாமல், நிறுத்தி வைக்க வேண்டும்.
உச்ச நீதிமன்ற அமர்வு நீதிபதிகளின் தலைமையில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் முறையாக ஆய்வு செய்து, எந்தெந்த வேட்பாளர்கள் எல்லாம் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தார்கள் என்பதை ஆய்வு செய்து, அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் வாக்காளர்களுக்கு வழங்கி பணத்தையும் அந்த வேட்பாளர் உடைய செலவு கணக்கில் சேர்த்து, அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதே போல இந்த தேர்தலை முழுமையாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தது ஆறு மாத காலத்திற்கோ அல்லது ஒரு வருட காலத்திற்கோ எல்லாம் சரியாகும் வரையிலும் குடியரசுத் தலைவர் ஆட்சியை, தமிழகத்திலே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்களிடம் கோரிக்கையாக வைத்திருக்கிறோம் என தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சியில் அமைந்திருக்கும் கொரோனா சிகிச்சை மையங்கள் அனைத்திலும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 11,645 படுக்கை வசதிகள் கிட்டத்தட்ட நிரப்பப்பட்டுள்ளது. ஏப்ரல் 18ம் தேதி அன்று மொத்தமாக 1104 படுக்கைகளில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். பிறகு ஏப்ரல் 22ம் தேதி அன்று எண்ணிக்கை 1900 ஆக உயர்ந்தது. பிறகு திங்கள் கிழமை அன்று 2948 படுக்கைகள் நிரப்பப்பட்டது. 5 நாட்களுக்கு முன்பு இருந்த நிலையைக் காட்டிலும் இது இரண்டு மடங்கு அதிகம்.
கொரோனா சிகிச்சை மையங்களில் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு, லேசானது முதல் மிதமான நோய் அறிகுறிகள் இருப்பவர்கள் மற்றும் வீட்டில் தனியாக படுக்கை அறை வசதி அற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
சென்னையில் தற்போது 31,500 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் 20 ஆயிரம் பேருக்கு சோதனை மேற்கொள்ளப்படுகிறது. நேர்மறை விகிதம் 20% ஆகும். ஞாயிற்று கிழமை அன்று 4206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் இந்த எண்ணிக்கை மே மத்தியில் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 80 லட்சம் மக்கள் தொகையை கொண்ட மாநகரத்தில் 3.09 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் 4567 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
சோதனை மற்றும் தடம் அறிதல் போன்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளோம் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர். பத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளை கொண்ட தெருக்களின் எண்ணிக்கை வெள்ள்ளிக்கிழமை 249 ஆக இருந்தது. தற்போது அது 308 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ராயபுரம் மற்றும் தேனாம்பேட்டை பகுதிகளில் முறையே 64 மற்றும் 65 தெருக்களில் 10க்கும் மேற்பட்ட கொரோனா நோய் தொற்று கொண்ட மக்கள் உள்ளனர்.
வேறுபாடுகளுக்கு அப்பால், ஒன்றாக இணைந்து இந்த தேசத்தை கொரோனா போன்ற பேரழிவில் இருந்து காக்க தலைவர் ஒருவர் வேண்டும் என்று திங்கள் கிழமையன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்டார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அவர் வழங்கிய பிரத்யேக பேட்டியில், காங்கிரஸ், இந்த அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருந்தது. இது போன்ற பொதுமக்கள் சுகாதார அவசரநிலைமையின் போது தலைமைத்துவத்தை மத்திய அரசு கைவிடுவது அதிர்ச்சியூட்டுகிறது. மேலும் அனைத்து தருப்பிரலும் நிர்வாகம் சரிவடைந்திருப்பதால் மக்கள் கைவிடப்பட்டிருப்பதாக உணருகின்றனர் என்றார் அவர்.
நீயா நானா என்பதற்கு பதிலாக நாமா? கொரோனா வைரஸா? என்பது தான் கொரோனாவிற்கு எதிரான போராக கருதுகிறோம். இது அரசியல் சீரமைப்புகளுக்கு அப்பாற்பட்டது. நாம் ஒரு நாடாக இணைந்து கொரோனாவுக்கு எதிராக போராட வேண்டும்.மோடி அரசு இந்த போர் கொரோனாவுக்கு எதிரானதே தவிர காங்கிரஸ் கட்சிக்கோ அல்லது மற்ற அரசியல் எதிர்க்கட்சிக்கோ எதிராக இல்லை என்பதை உணர வேண்டும்.
அரசியல் ஒருமித்த கருத்து என்பது மிகவும் அவசியம். நாம் அனைவரையும் ஒன்றிணைத்து தற்போது நாம் சந்தித்து வரும் பேரழிவுக்கு எதிராக போரிட வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, மோடியின் அரசு ஒருமித்த கருத்தை வற்புறுத்துவதை தான் விரும்புகிறது என்பதை நிரூபித்துள்ளது. சவாலான காலங்களில் அரசியல் தலைமை அரசியல் வேறுபாடுகளுக்கு மேலாக உயர வேண்டும் என்று நான் நம்புகிறேன். கடந்த காலங்களில் இது போன்று நாம் நிறைய செய்துள்ளோம். ஒரு நாடாக, ஒரு ஜனநாயகமாக இது போன்ற சூழலில் இந்தியா ஒன்றாக இணைந்துள்ளது என்று சோனியா கூறியுள்ளார்.
ஒரு எதிர்க்கட்சியாக, காங்கிரஸ் அரசாங்கத்திடமிருந்து வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்த வேண்டும், மக்களைக் காப்பாற்ற வேண்டும், உயிர்களைக் காப்பாற்றுவதை விட இப்போது எதுவும் முக்கியமில்லை என்பதை அங்கீகரிக்க அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சோனியா காந்தி கூறினார்.
முழு அளவிலான ஆட்சி சரிவு மற்றும் பொறுப்பை விட்டுக் கொடுத்து மக்கள் கைவிடப்பட்டது போன்று இது உள்ளது. நாங்கள் மக்களின் குரல்களை கேட்டு அவர்களின் வேதனையை வெளிப்படுத்துவதற்கு எதிர்க்கட்சியாக எங்களின் பங்கு அதிகம் என்று அவர் கூறினார். அரசு காங்கிரஸ் கட்சியை அணுகி உதவி கோரினால் காங்கிரஸ் உதவுமா என்ற கேள்விக்கு, நிச்சயமாக, தெளிவாக ஆம் என்று தான் கூறுவேன் என்றார்.
அரசாங்கத்தின் உடனடி கவனம் தேவைப்படும் பல சிக்கல்களை பட்டியலிட்டார் சோனியா காந்தி. ஆக்ஸிஜன் வழங்குதல், மருந்துகளை கள்ள சந்தைகளுக்கு செல்லாமல் தடுத்தல், படுக்கைகளை உறுதி செய்தல், வீட்டில் இருந்தே சிகிச்சை பெறுவதற்கான நெறிமுறைகள், தடுப்பூசிகள், விரைவாக தடம் அறிதல் மற்றும் சோதனை, வைரஸின் பின்தங்கிய மற்றும் மரபணு வரிசைப்படுத்துதலுக்கான பொருளாதார ஆதரவு ஆகியவை அதில் அடங்கும்.
அரசாங்கமும் இந்தியா இன்கும் தங்கள் வளங்களை ஒன்றிணைத்து புதிய மற்றும் போதுமான மருத்துவமனை உள்கட்டமைப்பை ஒரு போர்கால ரீதியில் உருவாக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். தவிர, மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ ஊழியர்கள், முன்கள மருத்துவ பணியாளர்கள் மற்றும் பிற முன்கள கொரோனா தடுப்பு பணியாளர்களை நிதி ரீதியாக ஊக்குவிக்கவும், சிறப்பு ரயில்கள் மற்றும் பிற வழிகளில் நகரங்களில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாப்பாக கொண்டு செல்லவும் அவர் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.
மத்திய அரசு 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் வருகிற மே 1-ம் தேதி முதல் செலுத்தப்படும் என அறிவித்திருக்கும் நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் நான்கு மாநிலங்கள் தங்களுக்கு போதுமான தடுப்பூசிகள் இல்லாததால் மே 1 ஆம் தேதி மத்திய அரசு அறிவித்துள்ள இயக்கத்தை தொடங்க முடியாது என அறிவித்துள்ளன.
காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் தடுப்பூசிக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. தடுப்பூசியை மாநில அரசுகளே கொள்முதல் செய்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், சீரம் நிறுவனத்திடம் ராஜஸ்தான் அரசு தடுப்பூசிகளை கோரியுள்ளது. இந்நிலையில், மே 15-ம் தேதிக்கு முன்னர் தடுப்பூசியை ராஜஸ்தான் மாநிலத்திற்கு வழங்க முடியாது என்று கோவிஷீல்ட்டை தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா கூறியுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ள்து.
தடுப்பூசி தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக சீரம் நிறுவனத்துடன் பேசும்படி, மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், சீரம் நிறுவனத்தை தொடர்புக் கொண்ட ராஜஸ்தானுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. மத்திய அரசு சீரம் நிறுவனத்திடம் கணிசமான எண்ணிக்கையில் உடனடியாக தடுப்பூசிகளைப் பெற ஆர்டர் செய்துள்ளது. மத்திய அரசின் ஆர்டர்களை அனுப்புவதற்கு மே 15 வரையிலான கால அவகாசம் தேவைப்படுவதால், அதன் பின்னரே மற்றவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால், ராஜஸ்தான் மாநிலத்துக்கு தடுப்பூசி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ராஜஸ்தான் அரசு கேள்வி எழுப்பி உள்ளது.
மாநிலங்கள் நேரடியாக தடுப்பூசிகளை வாங்க விரும்பினால், அதற்கான செயல்முறை என்ன என்பதை மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும். மேலும், ராஜஸ்தானில் 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களில் 3.13 கோடி பேர் உள்ளனர். தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வரும் சூழலில், மத்திய அரசின் அனைவருக்கும் தடுப்பூசி கொள்கையை ராஜஸ்தான் அரசு எவ்வாறு செயல்படுத்தும்,’ என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ரகு சர்மா கேள்வி எழுப்பி உள்ளார்.
கோவாக்சின் தடுப்பூசியை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு, மத்திய அரசு மாநிலங்களுக்கும் குறிப்பிட்ட அளவு தடுப்பூசிகளை வழங்க அறிவுறுத்த வேண்டமென, அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தடுப்பூசிக்கான பணத்தை செலுத்த மாநில அரசு தயாராக இருப்பதாகவும், ஆனால், மத்திய மாநில அரசுகளுக்கு வழங்கும் விலை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் எனவும் செய்தியாளர் சந்திப்பில் ஷர்மா தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக, ராஜஸ்தான் முதல்வர் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப், ஜார்க்கண்ட் ஆகிய மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
சத்தீஸ்கர் சுகாதார அமைச்சர் டி எஸ் சிங் தியோ மற்றும் பஞ்சாப் சுகாதார அமைச்சர் பல்பீர் சிங் சித்து ஆகியோர் ராஜஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சர் ஷர்மாவை அடுத்து, மத்திய அரசுக்கு எதிரான குரல்களை எழுப்பி உள்ளனர்.
அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்ற உத்தரவுகளை வழங்க அசாம் முயற்சி செய்தது. ஆனால் ஒரு மாதத்திற்குப் பிறகே தடுப்பூசிகளைப் பெற சாத்தியம் இருப்பதாக அம்மாநில அரசு கூறியுள்ளது. நான்கு மாநில சுகாதார அமைச்சர்களும் மே 1 முதல் அடுத்த கட்ட தடுப்பூசிகளுக்கு மாநிலங்கள் தயாராக இருப்பதாக கூறியுள்ள நிலையில், தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் நாங்கள் கேட்கும் டோஸ்களின் அளவை வழங்க இயலாத சூழலை சுட்டிக் காட்டி உள்ளனர்.
மாநில அரசுகளுக்கு போதிய அளவு தடுப்பூசி கிடைக்கவில்லை என்றால் மக்களுக்கு தடுப்பூசி செலுத்த இயலாது என்ற நிலைமை மிகவும் தெளிவாக தெரிய வருகிறது. தடுப்பூசி இந்தியர்கள் அனைவருக்கும் கிடைக்கப் பெறும் வகையில் உள்ளதாக மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால், மாநில அரசுகளுக்கு போதுமான தடுப்பூசிகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில், நாடு முழுவதும் தடுப்பூசி கொள்கை தவறாக வழிநடத்தப்படுகிறது. ஒரு வகையில், மாநிலங்களின் மீது சுமையை சுமத்தி, அவற்றை இழிவுபடுத்தும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக சத்தீஸ்கர் சுகாதார அமைச்சர், சித்து தெரிவித்துள்ளார். மேலும், தடுப்பூசி கோரிக்கைகளுக்கு எங்கள் அனைவருக்கும் ஒரே பதில் அளிக்கப்பட்டு வருகிறது. மே 15 வரை முன்பதிவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் மாநிலங்களுக்கு வழங்கப்படும் என கூறப்படுவதாகவும் கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் அனைவருக்கும் நாங்கள் தடுப்பூசியை போட விரும்புகிறோம். ஆனால், அவற்றைஉ நாங்கள் எங்கள் வீடுகளிலா தயாரிக்க முடியும் என, அம்மாநில சுகதாரத்துறை அமைச்சர் பன்னா குப்தா தெரிவித்துள்ளார். இதற்கிடையில், 18 ,முதல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட 30 லட்சம் கோவிஷீல்ட் டோஸ்களை வழங்குமாறு முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், மத்திய சுகாதாரத் துறையை கேட்டுக் கொண்டதாக, பஞ்சாப் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு மாநிலங்களுக்கும் ஆக்ஸிஜன் மற்றும் ரெமெடிசிவர் வழங்குவதில் மத்திய அரசு பாகுபாடு காட்டுவதாக நான்கு மாநில் அரசுகளும் குற்றம் சாட்டி உள்ளன.
சுமார் 30 சதவீத கிராமங்களுக்கு தொற்று பரவியுள்ள ராஜஸ்தானில் நிலைமை மோசமாகி வருவதாக சர்மா கூறினார். மீட்பு விகிதம் 98.60 சதவீதத்திலிருந்து 73.60 சதவீதமாக குறைந்துள்ளது என்றும், இருப்பினும், இறப்பு விகிதம் 0.70 சதவீதமாக குறைவாகவே உள்ளது.
ராஜஸ்தானில் 8 லட்சம் தடுப்பூசி டோஸ்களே இருப்பதாக சுகாதார அமைச்சர் சர்மா கூறியுள்ளார். பஞ்சாபில் 4 லட்சம் டோஸ் இருப்பதாக சித்து கூறியுள்ளார். மேலும், ஜார்கண்ட் அமைச்சர் குப்தா, பங்களாதேஷில் இருந்து ரெமெடிவிர் வாங்க மாநில அரசு விரும்பியதாகவும் ஆனால், மத்திய அரசு இறக்குமதிக்கு அனுமதி வழங்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசி மற்றும் அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகளை மத்திய அரசு முறையாக வழங்க வேண்டும் என பஞ்சாப் சுகாதார அமைச்சர் சித்து கூறியுள்ளார். மேலும், ஒரு அரசியலமைப்பு, ஒரு வரி பற்றி பேசும் பாஜக அரசாங்கம் இப்போது தடுப்பூசிகளின் மாறுபட்ட விலை நிர்ணயம் மூலம் தொற்றுநோயிலிருந்து நன்மைகளைப் பெற முயற்சிக்கிறதா என கேள்வியையும் எழுப்பி உள்ளார்.
நரேந்திர மோடி அரசாங்கம், உலகில் மிகவும் பாரபட்சமான தடுப்பூசி கொள்கையை அறிமுகப்படுத்தியதாக காங்கிரஸ் மத்திய தலைமை ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டியது. மேலும் தடுப்பூசி போடுவதில் வெட்கக்கேடான லாபத்தை அடைய மத்திய அரசு அனுமதித்துள்ளதாகவும் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
Amid concerns in India and Brazil, the unused vaccine stockpile in US : இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் நிலை குறித்து நாங்கள் கவலை கொள்கின்றோம். இந்திய அரசுடன் நெருக்கமாக பணியாற்றி வருகின்றோம். இந்திய மக்களுக்காகவும், முன்கள பணியாளர்களுக்காகவும் அதிக ஆதரவு அளிப்போம் என்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் அந்தோணி ப்லிங்கன் ஞாயிறு அன்று ட்வீட் வெளியிட்டிருந்தார்.
தடுப்பூசிகளை சமமாக வழங்க அமெரிக்கா மேலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பலரும் அறிவுறுத்தி வந்த நிலையில் இந்த ட்வீட் வெளியானது. தடுப்பூசி சமநிலை குறித்து வெளியாகும் பிரச்சாரத்தில் சமீபத்தில் மில்லியன் கணக்கில் தேக்கம் அடைந்திருக்கும் அஸ்ட்ரெஜெனாகா மருந்து குறித்தும் குறிப்பிடப்பட்டது. இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாட்டினருக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க தொற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் முதல் தொழில் அதிபர்கள் என பலரும் பைடன் நிர்வாகத்தை கேட்டுக் கொண்டனர்.
இந்த கையிருப்பு என்ன?
பொது சுகாதார பள்ளி, ப்ரவுன் பல்கலைக்கழகம், ஆஷிஸ் ஜாவின் கூற்றுப்படி, 35 முதல் 40 மில்லியன் டோஸ்களை அமெரிக்கர்கள் பயன்படுத்தமாட்டார்கள். கடந்த கோடை காலத்தில் அமெரிக்காவும் அஸ்ட்ராஜெனெகாவும் 300 மில்லியன் டோஸை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. தடுப்பூசிகள் வெளிவருவதற்கான காலம் அதிகம் எடுத்துக் கொள்ளப்பட்டது. , மேலும் பல பாதுகாப்பு மற்றும் செயல்திறன் கவலைகளால் மறைக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்துகளை திசை திருப்புவது தொடர்பாக எழுந்துள்ள வாதங்கள் என்ன?
ஏப்ரல் ஆரம்பத்தில் அமெரிக்க தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோணி ஃபௌசி, அமெரிக்காவிற்கு ஆஸ்ட்ரஜெனெகா மருந்து தேவைப்படாது என்றும், எஃப்.டி.ஏவால் இதற்கு அவசர கால பயன்பாட்டு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது. ஐரோப்பாவில் இந்த தடுப்பூசிகள் காரணமாக பெண்களுக்கு ரத்த உறைதல் போன்ற விளைவுகள் ஏற்பட்டதாக கூறப்பட்டதால் அனுமதி மேலும் தாமதமாக்கப்பட்டது. இது அனுமதி பெற்ற சமயத்தில் அமெரிக்காவில் அனைத்து இளம் பிராயத்தினரும் தடுப்பூசியை பெற்றனர். அந்த சமயத்தில் மூன்று பல்வேறு தடுப்பூசிகள் அமெரிக்காவில் இருந்தன.
அமெரிக்கா நான்கு மில்லியன் ஆஸ்ட்ரஜெனகா டோஸ்களை மெக்ஸிகோ மற்றும் கனடாவிற்உ வழங்கியது. மார்ச் 22ம் தேதி அன்று ஆஸ்ட்ரஜெனகா அமெரிக்க சோதனையை முடித்தது. அப்போது, என்ன? நான் அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து அக்கறை செலுத்தவில்லையா? எஃப்.டி.ஏ ஆஸ்ட்ரெஜெனகாவிற்கு அனுமதி அளித்த நேரத்தில் எங்களிடம் நிறையை தடுப்பூசிகள் இருக்கும். ஜனவரியில் இந்த சோதனை முடித்திருந்தால் பரவாயில்லை. மே மாதம் எங்களுக்கு இது தேவையில்லை என்று ஜா ட்வீட் செய்திருந்தார். அந்த மருந்துகளை இந்தியாவிற்கு அனுப்புகிறோம் என்றூ ஹார்வர்ட் மருத்துவ பிரிவின் துணை பேராசிரியர் ஆடம் கஃப்னே ட்வீட் பதிவிட்டார்.
அமெரிக்க வர்த்தக சபை வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதன் நிர்வாக துணைத் தலைவர் “இந்த தடுப்பூசி அளவுகள் அமெரிக்காவில் தேவையில்லை, அங்கு தடுப்பூசி உற்பத்தியாளர்கள் ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ள கூடிய அளவுக்கு ஜூன் மாத தொடக்கத்தில் போதுமான அளவு உற்பத்தி செய்ய முடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. . இந்த நடவடிக்கை அமெரிக்க தலைமையை உறுதிப்படுத்தும், இதில் கோவாக்ஸ் போன்ற முயற்சிகள் உட்பட, உலகெங்கிலும் உள்ள கூட்டாளர்களுடன் நாங்கள் பணியாற்றுகின்றோம். ஏன் என்றால் நாம் அனைவரும் அதிலிருந்து பாதுகாப்பாக இருக்கும் வரை யாரும் தொற்றுநோயிலிருந்து பாதுகாப்பாக இல்லை என்று குறிப்பிட்டது.
சனிக்கிழமை அன்று ராய்ட்டர்ஸிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர், இந்திய அரசுக்கு தேவையான உதவிகள் துரித கதியில் நடத்தப்படும் என்றும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது என்றும் கூறினார். இது அஸ்ட்ராசெனெகா மருந்துகளை மற்ற நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் ஒரு நாடு, தற்போது தன்னுடைய சொந்த நாட்டில் மோசமான சூழலை சந்தித்து வருகிறது என்று வெள்ளை மாளிகையில் இந்தியாவின் நிலை குறித்து கேள்வி எழுப்பினார்.
பௌசி இது குறித்து பேசிய போது, சி.டி.சி. தற்போது அவர்களுக்கு உதவி வருகிறது. மற்ற நாடுகளும் இதே போன்ற சூழலில் இருக்கின்றன. அவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இது போன்ற சூழலில் நாங்கள் அனைவருக்கும் எங்களால் ஆன உதவிகளை செய்து வருகிறோம். இது எப்படி செல்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
அமெரிக்க கோவிட் -19 பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஜெஃப் ஜீயண்ட்ஸ் மேலும் கூறியதாவது: “குவாட் கூட்டாண்மை மற்றும் குழு நாடு முழுவதும் உதவிகளை வழங்கி வருகிறது. மேலும், இது ஒரு உலகளாவிய தொற்றுநோய் என்று உங்களுக்குத் தெரியும், எல்லா இடங்களிலும் தொற்றுநோயை நாம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவராவிட்டால் என்ன நடக்கும் என்பதற்கான ஆபத்தை இந்தியா தற்போது வெளிக்காட்டுகிறது. அதனால்தான் நாங்கள் கோவாக்ஸில் மிகப்பெரிய முதலீடு செய்தோம், மேலும் தடுப்பூசி விநியோகத்தைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்கள் விநியோகத்தைச் சுற்றியுள்ள நம்பிக்கை அதிகரிக்கும் போது, நாங்கள் அது குறித்து ஆராய்வோம் என்று அவர் கூறினார்.
அமெரிக்கா நிர்வாகத்தின் மீது வைக்கப்படும் பிற அழுத்தங்கள் என்ன?
சீரம் நிறுவனம், மூலப் பொருட்கள் மீத் அமெரிக்கா விதித்திருக்கும் தடையை நீக்க வேண்டும் என்று கூறினார். அது கோவோவாக்ஸிற்காகவே தவிர கோவீஷீல்டிற்காக இல்லை என்ரு பிறகு அந்நிறுவத்தின் தலைமை செயல் இயக்குநர் பூனவல்லா கூறினார்.
று கார்னகி இந்தியா, அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன், ஐ.டி.எஃப்.சி நிறுவனம் மற்றும் தக்ஷாஷிலா உள்ளிட்ட சிந்தனைக் குழுக்களின் கூட்டமைப்பு, இந்த மூலப்பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு சட்டத்தை இந்தியாவிற்கு மட்டும் விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.
மூன்றாவது முன்னணியில், உற்பத்தியை விரைவுபடுத்துவதற்காக உலக வர்த்தக அமைப்பில் காப்புரிமை தள்ளுபடியை ஆதரிக்க அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் தடுப்பூசிகள் எவ்வாறு சேமிக்கப்படுகிறது?
தற்போது அளவுக்கு அதிகமாக பெரும் பணக்கார நாடுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. அவை நேரடியாக உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பெறப்பட்டதாகும்.
ப்ளூம்பெர்க்கின் தடுப்பூசி டிராக்கரின் கூற்றுப்படி, அதிக வருமானம் பெறும் நாடுகள் மிகக் குறைந்த நாடுகளை விட 25 மடங்கு வேகமாக தடுப்பூசி போட்டுக் கொள்கின்றன. உலகின் தடுப்பூசிகளில் 22.9% அமெரிக்காவில் உள்ளது, ஆனால் உலக மக்கள் தொகையில் 4.3%மட்டுமே. சீனாவில் முறையே 21.9% மற்றும் 18.2%, மற்றும் இந்தியா 13.8% மற்றும் 17.7% என டிராக்கர் தெரிவித்துள்ளது. அனைத்து தடுப்பூசிகளிலும் கிட்டத்தட்ட பாதி உலக மக்கள்தொகையில் 16% ஆக உள்ளது. உலகின் ஏழ்மையான 92 நாடுகளின் மக்கள்தொகையில் 60% கூட இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு தடுப்பூசி போட முடியாது என்று வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. இந்தியா மக்கள் தொகையில் 8% முதல் டோஸ் மற்றும் 1% இரண்டாம் டோஸ்களை போட்டுள்ளது. பிரேசில் 12% க்கும் குறைவான மக்களே தடுப்பூசி போட்டுள்ளனர்.