வியாழன், 1 ஏப்ரல், 2021

127 தொகுதிகள்; 23% மக்கள் தொகை; மேற்கு வங்கத் தேர்தலில் எஸ்.சி. வாக்குகள் யாருக்கு?

 Fight for SC vote in West Bengal: 23% of state numbers, 127 seats : 2011ம் ஆண்டு கணக்கெடுப்பில் மேற்கு வங்கத்தில் உள்ள மக்கள் தொகையில் 27% நபர்கள் இஸ்லாமியர்கள். இவர்களின் வாக்குகளுக்காக வெளிப்படையாக தேர்தல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவர்களுக்கு அடுத்தபடியாக 23.51% பட்டியல் வகுப்பினர் இருந்து வருகின்றனர். வர்க்கத்தை மையமாகக் கொண்ட மாநிலத்தின் இடது ஆதிக்க அரசியலில் நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட, பட்டியல் சாதியினரை மையமாக வைத்து முதன்முதலில் தேர்தலை சந்திக்கிறது பாஜக. அதே சாத்தியத்தை வைத்து தற்போது டி.எம்.சி. முன்னேறுகிறது.

பட்டியல் இனத்தவர்களின் வாக்கு

மேற்கு வங்கத்தில் 23.51% ஆக இருக்கும் பட்டியல் இனத்தவர்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகமாக இருக்கும் பட்டியல் இனத்தவர்களை கொண்ட மூன்றாவது பெரிய மாநிலமாகும். முழுமையான எண்ணிக்கையைப் பொறுத்தவரை, வங்காளம் மற்ற இரு மாநிலங்களை விட மிக அதிகமாக உள்ளது, 60க்கும் அதிகமான அங்கீகரிக்கப்பட்ட குழுக்கள் 9 மாவட்டங்களில் உள்ள 127 தொகுதிகளில் இவர்களின் மக்கள் தொகை 25% ஆக உள்ளது. அது மட்டும் இல்லாமல் மீதம் இருக்கும் 6 மாவட்டங்களில் உள்ள 78 தொகுதிகளில் இருக்கும் எஸ்.சிக்களின் மக்கள் தொகை 15 முதல் 25% உள்ளது.


2019ம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தலில் 18 இடங்களில் வென்ற போது, எஸ்.சிக்களுக்காக ஒதுக்கப்பட்ட 68 சட்டமன்ற இடங்களில் 33 இடங்களில் பாஜக முன்னிலை வகுத்தது. அந்த 33 தொகுதிகளில்ல் 26 தொகுதிகளில் மத்துவா மக்கள் வாழ்கின்றனர். அதே பகுதிகளில் 34 இடங்களில் திரிணாமுல் முன்னிலை வகுத்தது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சியினர் 3 இடங்களில் மட்டுமே முன்னிலை வகுத்தனர்.

2016ம் ஆண்டு எஸ்.சிக்களின் வாக்குகள் திரிணாமுல் கட்சியில் இருந்து பாஜகவிற்கு சென்றது என்று கூறப்பட்டது. ஆனாலும் ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் திரிணாமுல் 50 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும், இடதுசாரி 10 இடங்களிலும் வெற்றி வெற்றிபெற்றது. 2011 தேர்தலில், டி.எம்.சி ஒதுக்கப்பட்ட 37 இடங்களை வென்றது, இடது 20, காங்கிரஸ் 10 மற்றும் எஸ்.யு.சி.ஐ (கம்யூனிஸ்ட்) 1. அந்த நேரத்தில் பாஜக கட்சி வெளிப்படையாக அங்கே இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நமசூத்திரர்கள்

நமசூத்திரர்கள் மேற்கு வங்கத்தில் இருக்கும் எஸ்.சி. பிரிவுகளில், ராஜ்பன்ஷிஸ்க்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள் (17.4%). மத்துவாக்களுடன் இணைந்து இவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 1.5 கோடி வாக்காளர்களாக இருக்கும். இவர்கள் 42 தொகுதிகளின் வெற்றியை உறுதி செய்வார்கள். மத்துவாக்களின் ஆன்மீக குரு ஹரிச்சந்த் தாகூரின் பிறப்பிடத்தைக் குறிக்கும் கோவிலில் பிரதமர் மோடி தனது வங்க பயணத்தின் போது பிரார்த்தனை செய்தார். அதே நேரத்தில் தான் மேற்கு வங்காளத்தில் முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது.

மத்துவாக்கள் கிழக்கு பாகிஸ்தானில் இருந்து , வங்கம் உருவாக்கப்பட்ட காலத்தில் மேற்கு வங்கம் வந்தவர்கள். இருப்பினும் அவர்களின் பெரும்பாலோனோருக்கு குடியுரிமை இன்னும் கிடைக்கவில்லை. பாஜகவின் சி.ஏ.ஏ. சட்டம் 2019 தேர்தலில் மதுவாக்கள் என்.டி.ஏவுக்கு பின்னால் செல்ல காரணமாக இருந்தது. இந்த தேர்தலில் பாஜக சி.ஏ.ஏ. குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிடும் வரையில் அந்த சட்டம் இன்னும் செயல்படுத்தப்படாமலேயே இருந்தது.

மமதா அரசாங்கம் தன்னுடைய பங்கிற்கு இம்மக்களுக்காக மேம்பாட்டு வாரியத்தை அமைத்து 244 அகதி முகாம்களை ஒழுங்குப்படுத்தியுள்ளது. இந்த முகாம்கள் வடக்கு 24 பாரகனாஸ் நடியா, தெற்கு 24 பாரகானாஸ், கொல்கத்தா, கூச் பெஹார் ஆகிய இடங்களில் உள்ளது. அதில் பலருக்கு பட்டாக்களையும் வழங்கியுள்ளது. தற்போதைய சட்டமன்றத் தேர்தலில், திரிணாமுல் 79 எஸ்சி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது, மொத்தமாக எஸ்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளை விட 11 அதிகம்.

யார் ஹரிசந்த் தாக்கூர்

வங்கதேசத்தில் உள்ள ஒரகண்டி என்ற பகுதியில் `1812ம் ஆண்டு ஹரிசந்த் தாக்கூர் பிறந்தார். தாக்கூரின் குடும்பத்தினர் அனைவரும் வைணவ இந்துக்கள். அவர் வைணவ இந்துத்துவத்தை அடிப்படையாக கொண்ட மத்துவா என்ற பிரிவை தோற்றுவித்தார். பின்பு இதை நமசூத்ரா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஏற்றுக்கொண்டனர், அவர்கள் அப்போது சண்டால்கள் என்ற பெயரால் அழைக்கப்பட்டனர்.

ஜகத் மாதா என்ற சாந்தி மாதாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். ஹரிசந்த் தாக்கூர் 1878ம் ஆண்டு ஃபரிதாபூரில் உயிரிழிந்தார். அவருடைய மகன்களில் ஒருவர் ஆங்கிலேய மருத்துவர் செசில் சிலாஸ் மீட்டுடன் இணைந்து சண்டால்களை நாமசூத்திரர்களாக வகைப்படுத்தினார்.

வடக்கு வங்கத்தில், மமதா அரசாங்கம், நாராயிணி பட்டாலியன் என்ற அமைப்பை ராஜ்பன்ஷிகளுக்காக உருவாக்கியது. கூச் பிஹாரியின் நாராயணி சேனாவை கவனத்தில் கொண்டு இந்த பெயர் வைக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் ராஜ்பன்ஷிஸ் கூச் பெஹார், ஜல்பைகுரி, டார்ஜிலிங், மால்டா, முர்ஷிதாபாத் ஆகிய இடங்களில் அதிகமாக இருக்கின்றனர். ராஜ்பன்ஷிகளுக்கு தனியாக மேம்பாட்டு வாரியத்தை உருவாக்கியது. அதே போன்று குர்மி, கமி, மற்றும் பத்கி பிரிவினருக்கும் வாரியத்தை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

source : https://tamil.indianexpress.com/explained/fight-for-sc-vote-in-west-bengal-23-of-state-numbers-127-seats-287455/