வெள்ளி, 16 ஏப்ரல், 2021

தேர்தல் முடிவுகள் தாமதம் ஆவதால் மாநில அரசுகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்

 சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரம் 6ம் தேதி முடிவடைந்த நிலையில், மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்தல் முடுவுகள் வெளியாவதற்கு கிட்டத்தட்ட ஒரு மாத காலம் இடைவெளி உள்ளது. இதனால், வாக்குப்பதிவு முடிந்த மாநிலங்களில் காபந்து அரசு பதவியில் இருப்பதால், கொரோனா தொற்றுநோய் பரவல் நெருக்கடி காலத்தில் மாநில அரசில் முக்கிய முடிவுகளை மேற்கொள்ள முடியாத நிலை இருப்பதால் மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்துவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்திய தேர்தல் ஆணையம் பிப்ரவரி 26ம் தேடி தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலை அறிவித்தது. அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களுக்கு ஏப்ரல் 26ம் தேதி நடைபெற்றது. அஸ்ஸாம் மாநிலத்தில் மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 6 ஆகிய தேதிகளில் மூன்று கட்டமாக வாக்குப்படிவு நடைபெற்றது. மேற்கு வங்கம் மாநிலத்தில் தேர்தல் பாதுகாப்பு காரணங்களால் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இதுவரை மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 6, ஏப்ரல் 10 ஆகிய தேதிகளில் 4 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இதற்கு அடுத்து, ஏப்ரல் 17, ஏப்ரல் 22, ஏப்ரல் 26, ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் இன்னும் 4 கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


Related Posts: