தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று மூன்றாவது நாளாக பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்து வருகிறது. இதில் மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் அதிக பாதிப்பு கொண்ட மாநிலங்களின் பட்டியலில் மராட்டியம் முதலிடத்தில் உள்ளது. இதனால் அம்மாநிலத்தில் 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், முழு ஊரடங்கு அமல்படுத்துப்பட்டுள்ளது. இதேபோல் இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு மற்றும் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.
பல மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது போல தமிழகத்திலும் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதில் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சம் தொட்டுவரும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில், 7819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 168 பேர் அதிகமாகி 7987பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிகத்தில் தொடர்ச்சியாக 3-வது நாளாக பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,62,935 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்புக்கு இன்று 29 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 12,999 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 4,176 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து இதுவரை 8,91,839 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள சென்னையில், இன்று ஒரே நாளில், 2,558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக
செங்கல்பட்டு மாவட்டத்தில், 685 (நேற்றைய பாதிப்பு 772)பேருக்கும்,, கோவை மாவட்டத்தில், 534 (நேற்றைய பாதிப்பு 540) பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 473 (நேற்றைய பாதிப்பு 383) பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 203 (நேற்றைய பாதிப்பு 124) பேருக்கும், தஞ்சை மாவட்டத்தில் 166 (நேற்றைய பாதிப்பு 158) பேருக்கும் மதுரை மாவட்டத்தில் 234 (நேற்றைய பாதிப்பு 199) பேருக்கும், கடலூர் மாவட்டத்தில் 179 (நேற்யை பாதிப்பு 175) பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-news-update-tamilnadu-covid-19-update-in-all-districts-292376/