சனி, 8 அக்டோபர், 2022

காங்கிரஸ் தலைவர் தேர்தல்:

 காங்கிரஸ் தலைவர் தேர்தல்: தமிழகத்தின் 710 ஓட்டுக்களில் சசி தரூர்-க்கு எத்தனை?

காங்கிரஸ் மூத்தத் தலைவர் சசி தரூர்

காங்கிரஸ் கட்சியில் தேசியத் தலைவர் பதவிக்கான தேர்தலில் மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவும் மற்றொரு மூத்த தலைவர் சசி தரூர் இடையே போட்டி நிலவி வருகிறது. இருவரும் காங்கிரஸ் கட்சி செயற்குழு உறுப்பினர்கள் இடையே பிரசாரம் செய்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில், தமிழக காங்கிரசில் 710 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதனால், தமிழக காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களின் வாக்குகள், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜூன் கார்கேவுக்கு ஆதரவாக இருக்குமா அல்லது சசி தரூருக்கு ஆதரவாக இருக்குமா என்ற கேள்விகள் எழுந்த நிலையில், சசி தரூர் அளித்த பதிலில் இருந்து எந்தப் பக்கம் காற்று வீசும் என்று தெளிவாகத் தெரியவந்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சசி தரூர் அழைப்பு விடுத்த கூட்டத்தை தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பெரும்பான்மையானவர்கள் புறக்கணித்ததை அடுத்து, தமிழக காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் மத்தியில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் மல்லிகார்ஜுன் கார்கே விருப்பமானவராக உருவெடுத்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் சசி தரூர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், தனக்கு ஆதரவு அளிக்கக் கோரி சசி தரூர் கூட்டிய கூட்டத்தில் தமிழகத்தின் 710 வாக்காளர்களில், ஒரு சில வாக்காளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இதன் மூலம், மல்லிகார்ஜுன் கார்கே, தமிழகத்தில் தனது பிரசாரப் பயணத்தைத் தொடங்காத நிலையில், எந்தப் பக்கம் காற்று வீசுகிறது என்பது அந்த மாநிலத்தில் சசி தரூர் அளித்த பதிலில் தெளிவாகத் தெரிந்தது.

காங்கிரஸ் கட்சியில் 60 ஆண்டுகளுக்கு மேலாக கள அஅரசியல் அனுபவத்தைக் கொண்ட மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் கட்சியில் மிகவும் மதிக்கப்படும் தலித் முகமாக இருக்கிறார். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இந்திரா காந்தி குடும்பம் எந்த வேட்பாளரையும் வெளிப்படையாக ஆதரிக்கவில்லை என்றாலும், அவர்கள் மல்லிகார்ஜுன் கார்கேவை ஆதரிப்பது உறுதியாகி உள்ளது. சசி தரூர் சத்யமூர்த்தி பவனுக்கு வந்தபோது கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் இல்லாததன் மூலம் மல்லிகார்ஜுன் கார்கே தான் அனைவரின் விருப்பமானவர் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான, ஐ.ஏ.என்.எஸ்., நிறுவனத்திடம் பேசுகையில், “சாதாரண கட்சி தொண்டர்கள் சசி தரூரை ஆதரிக்க மாட்டார்கள். ஏனெனில், அவர் அணுக முடியாதவர், சாதாரண கட்சி நிர்வாகிகளுக்குகூட அணுக முடியதாவர் என்ற உணர்வு உள்ளது. அவரது சொந்த தொகுதியான திருவனந்தபுரத்தில் இருந்து, அவர் சாதாரண மக்களை சந்திக்க மாட்டார், எப்போதும் மேல்தட்டு வர்க்கத்தினராக பார்க்கப்படுகிறார்.” என்று கூறினார்.

காங்கிரஸ்காரர்கள் மேல்தட்டு தலைவர்களை விரும்புவதில்லை என்றும், சமூகத்தின் நாடித் துடிப்பை அறிந்து களத்தில் மக்கள் அமைப்பை நடத்த வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்கள்.

இருப்பினும், படித்த நடுத்தர வர்க்க இளைஞர்கள், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பட்டியலில் இடம் பெறாத, திருவனந்தபுரம் எம்.பி.,க்கு ஓட்டுப் போட முடியாத, சசி தரூருக்கு ஆதரவாக, சத்யமூர்த்தி பவனை அடைந்தனர்.

காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொறுப்பாளரான மற்றொரு மூத்த தலைவர், ஒருவர் ஐ.ஏன்.என்.எஸ் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “சசி தரூர் வெளியுலகிற்கு முன்னிறுத்தப்படுவதற்கு நல்லவராக இருக்கலாம். அவர் சாதுர்யமானவர், நல்ல நடத்தை உடையவர், நல்ல ஆங்கிலம் பேசுவார். உலகளாவிய தொடர்புகள் உள்ளன. ஆனால் முக்கிய விஷயம் என்னவென்றால், அது கட்சிக்கு என்ன பலன் தருகிறது என்பதுதான். மக்கள் அடித்தட்டு மற்றும் தொண்டர்களுடன் தொடர்புள்ள ஒருவரையே விரும்புகிறார்கள். காங்கிரஸ்காரர்களுக்கும் காங்கிரஸ் அனுதாபிகளுக்கும் இராஜதந்திரத்தின் மொழி புரியாது. அவர்களுக்கு தெரிந்த ஒருவரைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள். அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டவரை விரும்புகிறார்கள். மல்லிகார்ஜுன் கார்கே அதில் அதில் பல மைல்கள் முன்னால் இருக்கிறார்.” என்று கூறினார்.

இதன் மூலம், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சசி தரூர் இவர்களிடையே யாருக்கு தமிழக காங்கிரஸ் வாக்களர்களின் ஆதரவு என்பது தெளிவாகி உள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/in-tamilnadu-how-many-votes-shashi-tharoor-will-get-in-congress-president-election-521777/