புதன், 19 அக்டோபர், 2022

அப்பல்லோவில் சிசிடிவி அகற்றம் ஏன்? ஜெயலலிதா பாதுகாவலர் வீரப்பெருமாள்

 18 10 2022


அப்பல்லோவில் சிசிடிவி அகற்றம் ஏன்? ஜெயலலிதா பாதுகாவலர் வீரப்பெருமாள்

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அப்பல்லோ மருத்துவமனையில் சிசி டிவிகேமராக்கள் செயல்படாதது குறித்து ஜெயலலிதாவின் பாதுகாவலர் வீரபெருமாள் ஆறுமுகசாமி ஆணையத்திடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.

ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது. விசாரணை அறிக்கை இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டது. இதில் இடம்பெற்றுள்ள பல்வேறு தகவல்கள் வெளியாகி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

அதில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அப்பல்லோ மருத்துவமனையில் சிசி டிவிகேமராக்கள் செயல்படாதது குறித்து ஜெயலலிதாவின் பாதுகாவலர் வீரபெருமாள் ஆறுமுகசாமி ஆணையத்திடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார்.

ஜெயலலிதாவின் பாதுகாவலர் வீரபெருமாள் கூறியிருப்பதாவது: “அப்பல்லோ மருத்துவமனையில் அரசு மற்றும் காவல் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படியே சிசிடிவி கேமிராக்கள் செயலிழக்க செய்யப்பட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவமனையில் விதிமுறைகளின் படியே சிசிடிவி கேமராக்கள் பராமரிக்கப்படுவதாக மருத்துவமனை சாட்சியங்கள் வாக்குமூலம். கேமிராக்களை யாரும் அகற்ற சொல்லவில்லை – மருத்துவமனை சாட்சியங்கள். அப்பல்லோ மருத்துவமனையில் 27 சிசி டிவி கேமிராக்கள் அணைக்கப்பட்டது. யார் உத்தரவின்படி அணைக்கப்பட்டது என தெரியாது.” என்று கூறியுள்ளார்.

ஜெயலலிதாவை ஸ்கேனுக்கு அழைத்து செல்லும் போது மட்டும் சிசி டிவி கேமிராக்கள் அணைக்கப்படும் – மருத்துவமனை நிர்வாகி சுப்பையா விஸ்வநாதன். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் ராம்மோகனராவ் அறிவுறுத்தலின் படியே சிசி டிவி கேமிராக்கள் அணைக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமிராக்கள் செயலிழக்கப்பட்டதால் பாதுகாப்பு நடவடிக்கைகளில் எந்தவித பாதிப்பும் ஏறபடவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.


Source 

https://tamil.indianexpress.com/tamilnadu/jayalalitha-security-guard-veeraperumal-cctv-camera-switched-off-in-apollo-hospital-527533/