வெள்ளி, 28 அக்டோபர், 2022

உத்தர பிரதேச முதல்வர் எதிரான வெறுப்பு பேச்சு; சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் அசம் கானுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

 

27 10 2022

யோகி ஆதித்யாநாத்க்கு எதிரான வெறுப்பு பேச்சு; அசம் கானுக்கு 3 ஆண்டு சிறை

சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் அமைச்சருமான அசம் கான், வெறுப்பு பேச்சு வழக்கில் ராம்பூர் நீதிமன்றத்தால் வியாழக்கிழமை குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டார். இந்த வழக்கில் அசம் கான் மற்றும் மற்ற இரண்டு குற்றவாளிகளுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ 2000 அபராதம் விதிக்கப்பட்டது என்று செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக அசம் கான் கருத்து தெரிவித்ததற்காக அவர் மீது வெறுப்புப் பேச்சு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதையடுத்து, இந்த ஆண்டு தொடக்கத்தில் அசம் கான் விடுவிக்கப்பட்டார். அசம் கான் மீது ஊழல், திருட்டு உட்பட 90 வழக்குகள் உள்ளன.

source https://tamil.indianexpress.com/india/sp-leader-azam-khan-convicted-in-2019-hate-speech-case-532131/