புதன், 19 அக்டோபர், 2022

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்

 18 10 2022

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த  இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது :

இந்திய ஒன்றியத்தில் இந்தி மொழியைத் திணிப்பதை மத்திய அரசு தனது வழக்காமாக கொண்டுள்ளது. தமிழினத்தைத் தமிழர் பண்பாட்டைக் காக்கும் போராட்டமாகத் தொடர்ந்து கொண்டு இருக்கிறோம். அமித் ஷாவின் பரிந்துரைகளை இந்தி பேசாத மாநில மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும்.

ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தி திணிப்புதான் என்று பாஜக நினைக்கிறது. ஒரே நாடு, ஒரே மொழி என்ற பெயரில் பிற தேசிய மொழிகளை அழிக்க முயற்சி செய்கிறது பாஜக அரசு. ஆங்கிலத்தை மொத்தமாக அகற்ற பாஜக அரசு முயற்சி செய்கிறது. மேலாதிக்கம் செலுத்தும் மொழியாக இந்தியை  மாற்றிக்கொண்டிருகின்றனர். ஆங்கிலத்தை அகற்றுவதற்கு பின்னால் இந்தியை அமர வைக்கும் எண்ணம்தான் உள்ளது”  என்று அவர் கூறினார்.  



source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-stalin-proposes-hindi-against-bill-in-tn-assembly-527329/