சனி, 22 அக்டோபர், 2022

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: வருவாய் வட்டாட்சியர் உள்பட 3 பேர் சஸ்பெண்ட்

 21 10 2022

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: வருவாய் வட்டாட்சியர் உள்பட 3 பேர் சஸ்பெண்ட்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் திருமலை சஸ்பெண்ட் (பணியிடை நீக்கம்) செய்யப்பட்டுளளார்.

திருமலை தற்போது நெல்லை மாநகர சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஆணையாளராக உள்ளார். திருமலை தவிர மற்ற 3 போலீஸ்காரர்கள் சுடலைகண்ணு, சங்கர், சதீஷ் ஆகியோரும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கை அக். 18ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள இந்நபர்களின் மீது முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது நினைவு கூரத்தக்கது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/thoothukudi-firing-case-3-officials-suspended-including-revenue-district-collector-529222/