வெள்ளி, 28 அக்டோபர், 2022

கோவையில் வெடித்த சிலிண்டரை ஏன் வெளியே காட்டவில்லை?

 


27 10 2022

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி இன்று(அக்டோபர் 27) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “

கோவை வெடி விபத்து தொடர்பாக தமிழக அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த வெடி விபத்து விவகாரத்தில் மர்மங்கள் நீடிக்கிறது. காவல்துறை இனி கடுமையான நடவடிக்கை
எடுக்க வேண்டும். கோவை மாநகரம் தீவிரவாதிகளின் புகலிடமாக இருக்க அவசியம் என்ன? கோவையில் சதி செய்ய காரணம் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் முடக்கி விட வேண்டும் என்பதே ஆகும்.

வெடி விபத்து வழக்கு தொடர்பாக அவர்கள் கேட்பதற்கு முன்பே ஏன் தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது என்று தெரியவில்லை. இந்த வெடி சம்பவத்தை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கண்டிக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு இருந்தும் யாரும் கண்டிக்கவில்லை. முதல்வர் ஸ்டாலின் ஏன் இந்த சம்பவத்தை கண்டிக்கவில்லை. முதல்வர் சம்பவ இடத்திற்கு வர வேண்டும். பாதுகாப்பு உத்திரவாதத்தை அளிக்க வேண்டும். முதல்வரின் மௌனம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

மக்கள் அச்சத்தோடு வாழ்ந்தால் அது ஜனநாயக நாடாக இருக்காது. தீவிரவாதத்திற்கு எதிராக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். காவல் நிலையங்களை அதிகரித்து என்ன பிரயோஜனம்.?
காவல்துறையினரை சுதந்திரமாக செயல்பட வைக்க வேண்டும்.

கோவையில் தமிழக அரசால் பயங்கரவாத எதிர்ப்பு படை அமைக்கப்பட வேண்டும். உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் கோவையில் சம்பவங்கள் நடக்க என்ன காரணம் என்பது குறித்து கமிஷன் அமைக்க வேண்டும். மாநில சுயாட்சி பேசும் நீங்கள் ஏன் என்.ஐ.ஏ விடம் வழக்கை கொடுத்தீர்கள்? வெடித்த சிலிண்டரை ஏன் பொது வெளியில் காட்டவில்லை. ஜமாத் தலைவர்கள் கருத்து தெரிவித்தது வரவேற்கதக்கது” எனத் தெரிவித்தார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/puthiya-tamilagam-party-leader-k-krishnasamy-532080/