செவ்வாய், 25 அக்டோபர், 2022

சூரிய கிரகணம்

 

உலகம் முழுவதும் இன்று தென்படும் சூரிய கிரகணத்தை காண தமிழ்நாட்டில் யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


உலகம் முழுவதும் இன்று சூரிய கிரகணம் நிகழ்கிறது. ரஷ்யா, கஜகஸ்தான், ஐரோப்பிய நாடுகள், வட ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஆசியாவின் சில பகுதிகளில் இந்த சூரிய கிரகணத்தை காணலாம். இந்தியாவில், மாலை 4.30 மணியளவில் சூரிய கிரகணம் தொடங்குகிறது. இதனையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களின் நடை அடைக்கப்படும்.

இந்த நிலையில், சூரிய கிரகணத்தை காண்பதற்கு, கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வு மையத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், யூடியூப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பொதுமக்கள் நேரடியாக காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, வான் இயற்பியல் ஆராய்ச்சியாளர் எபினேசர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும், சூரிய கிரகணத்தால் எந்தவொரு ஆபத்தும் ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் சூரிய கிரகணம் கொடைக்கானலில் இரண்டு முதல் மூன்று சதவீதம் தென்படும் என்றும் வான் இயற்பியல் ஆராய்ச்சியாளர் எபினேசர் விளக்கமளித்துள்ளார்.




source https://news7tamil.live/todays-solar-eclipse-special-arrangement-to-watch-on-youtube-social-media.html