19 10 2022
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அண்மையில் அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் 112 பரிந்துரைகள் செய்யப்பட்டு, அவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த பரிந்துரைகளில் பெரும்பாலானவை இந்தி மொழியை திணிக்கும் முயற்சியாகவே இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு தமிழகத்தில் தி.மு.க உள்பட பல்வேறு கண்டனம் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து இன்று (அக்டோபர் 19) கோவை உக்கடம் பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் முஸ்தபா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ் புலிகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தந்தை பெரியார் திராவிட கழகம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
செய்தி பி.ரஹ்மான், கோவை
source https://tamil.indianexpress.com/tamilnadu/sdpi-stage-protest-aganist-union-government-hindi-imposition-527900/