செவ்வாய், 25 அக்டோபர், 2022

நெருங்குகிறது ”சித்ரங்” – 2ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்

 

24 10 2022

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளதால், நாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெறும் என்றும், வங்கதேசம் அருகே நாளை கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலுக்கு சித்ரங் என பெயரிடப்பட்டுள்ளது

இதனையடுத்து நாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் இன்று 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தொலைதூரத்தில் புயல் உருவாகி இருப்பதை மீனவர்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் இந்த எச்சரிக்கை கூண்டானது ஏற்றப்பட்டுள்ளது.

மேலும் ஏற்கனவே கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற படகுகளுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக அருகில் உள்ள துறைமுகங்களுக்கு கரை திரும்ப படகு உரிமையாளர்களுக்கு மீன்வளத்துறையினர் உத்தரவிட்டு உள்ளனர். இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.


source https://news7tamil.live/approaching-chitrang-no-2-storm-cage-ascendant.html