செவ்வாய், 25 அக்டோபர், 2022

9 துணை வேந்தர்களை ராஜினாமா செய்ய கவர்னர் உத்தரவு: கேரளாவில் புதிய சர்ச்சை

 

24 10 2022

9 துணை வேந்தர்களை ராஜினாமா செய்ய கவர்னர் உத்தரவு: கேரளாவில் புதிய சர்ச்சை
கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான்

முன்னெப்போதும் இல்லாத வகையில், கேரளாவில் உள்ள ஒன்பது பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் திங்கள்கிழமை (அக்.24) காலை 11.30 மணிக்குள் ராஜினாமா செய்யுமாறு ஆளுநர் ஆரிப் முகமது கான் உத்தரவிட்டுள்ளார்.
ஏபிஜே அப்துல் கலாம் டெக்னாலஜி பல்கலைக்கழக துணை வேந்தர் எம்.எஸ்., ராஜஸ்ரீ நியமனத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து, பல்கலைகழகங்களின் வேந்தர் திரு. கான், இந்த உத்தரவை பிறப்பித்தார்.

முன்னதாக, துணைவேந்தர் நியமனத்தில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) விதிமுறைகளை மீறியதாக ஆளுநர் அறிக்கை ஒன்றில் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து தேடுதல் குழு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணை வேந்தர்கள் பெயர்களை பரிந்துரைக்க தவறிவிட்டது. இதனால் ஆளுநர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கவர்னரின் இந்த உத்தரவை ஆளும் இடதுசாரி அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. இது பல்கலைக்கழகங்களில் ஆர்எஸ்எஸ் இந்துத்துவத்தை திணிக்கும் முயற்சி எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கண்ணூர் பல்கலைக்கழக துணைவேந்தர் கோபிநாத் ரவீந்திரன் ராஜினாமா செய்யப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கவர்னரின் உத்தரவுக்கு எதிராக முதலமைச்சர் பினராய் விஜயன் சட்ட ரீதியான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.


source https://tamil.indianexpress.com/india/kerala-governor-demands-resignation-of-nine-vice-chancellors-530636/