திங்கள், 24 அக்டோபர், 2022

சூரியகிரகணம் குறித்த அறிவிப்பு. 25 10 2022

 இறைவனின் திருப்பெயரால்...

சூரியகிரகணம் குறித்த அறிவிப்பு.
வரும் 25.10.2022 செவ்வாய்க்கிழமை அன்று சூரிய கிரகணம் தென்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஐரோப்பா, தெற்கு ஆசியா, மேற்கு ஆசியா, வடக்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா, அட்லாண்டிக் பகுதிகளில் இருந்து பார்க்கும்போது தெரியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்த வரை சென்னையில் மாலை 5.14 மணிக்கு ஏற்பட தொடங்கும் சூரிய கிரகணம் 30 நிமிடங்களை வரை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அவரவர் தங்கள் பகுதியில் கிரகணம் தென்படுகிறதா என உறுதி செய்து கொள்ளவும்.
சூரிய மற்றும் சந்திர கிரகணங்களைப் பார்த்தால் அதற்கென ஒரு தொழுகையை நிறைவேற்ற வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.
கிரகணம் தெரியவில்லை என்றாலோ, அல்லது மேகம் மறைத்திருந்தாலோ தொழுகையை நிறைவேற்றத் தேவையில்லை.
கிரகணத் தொழுகை பள்ளிவாசலில் ஜமாஅத்தாக நிறைவேற்ற வேண்டிய தொழுகையாகும்.
கிரகண நேரத்தில் தொழுகை மட்டுமல்லாது, திக்ரு செய்தல், பாவமன்னிப்பு தேடுதல், தர்மம் போன்ற அமல்களையும் செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். எனவே இவற்றைக் கவனத்தில் கொண்டு செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவண்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
23/10/2022

Related Posts: