வியாழன், 27 அக்டோபர், 2022

இப்படி புக் பண்ணுங்க… கியாஸ் சிலிண்டர் கம்மி விலைக்கு கிடைக்கும்

 

கியாஸ் விலை எங்கேயோ போய்கிட்டு இருக்கு. பலரும் கியாஸ் சிலிண்டரில் இருந்து எலெக்ட்ரிக் குக்கருக்கு மாறினாங்க. சில குடும்ப தலைவிகள் மாதம் மின்சார கட்டணம் ரூ.200 முதல் ரூ.250 வரைதான் உயர்கிறது.
கியாஸ்-ஐ விட எலெக்ட்ரானிக் குக்கர் எவ்வளவோ பரவாயில்லை என்று நிம்மதி பெருமூச்சு விட்டாங்க. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு மின்சார கட்டணத்தை வேறு எசக்குபிசக்கா உயர்த்திட்டாங்க.

இதற்கு மத்தியில், கியாஸ் சிலிண்டர் புக்கிங் ஆன்லைன் தளங்கள் குறைந்த விலையில் கியாஸ் சிலிண்டரை விநியோகம் செய்கின்றன.
இதனால் உங்களுக்கு வீண் அலைச்சல் குறைவு. அந்த வகையில் பிரபல ஆன்லைன் தளமாக பேடிஎம் சில சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
இதன் மூலம் நீங்கள் சில சலுகைகளுடன் சிலிண்டர்-ஐ புக் செய்ய முடியும். இந்த சலுகையை பாரத் கியாஸ், HP கியாஸ், இண்டேன் கியாஸ் ஆகிய நிறுவனங்களில் பயன்படுத்தி குறைந்த விலையில் சிலிண்டர் வாங்க முடியும்.

இதில் தற்போது ஒரு கியாஸ் சிலிண்டருக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை தள்ளுபடி கிடைக்கிறது. இந்த ஆஃபர் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் வழங்கப்படுகிறது.
சில நேரங்களில் 10 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இந்தச் சலுகையை ஒரே ஒரு முறை பயன்படுத்திக் கொள்ளலாம். இதேபோன்ற சலுகையை போன் பே மற்றும் கூகுள் பே உள்ளிட்ட நிறுவனங்களும் கொடுக்கின்றன.


source https://tamil.indianexpress.com/tamilnadu/how-to-easy-and-reduce-the-rate-of-cooking-cylender-before-booking-531717/

Related Posts: